தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Report: இரண்டு நாள்களுக்கு லேசான மழை, உறைபனிக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Weather Report: இரண்டு நாள்களுக்கு லேசான மழை, உறைபனிக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Jan 28, 2024, 03:26 PM IST

google News
கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெயக்கூடும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பகல் பொழுதில் வறண்ட வானிலை நிலவி வந்தாலும், அதிகாலை அல்லது இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் மேலும் தொடரும் எனவும், மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிழக்கு திசையில் காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஜனவரி 29ஆம் தேதியை பொறுத்தவரை தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேலையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி வறண்ட வானிலை நிலவும். ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி