தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Michaung Cyclone : ஜே.சி.பி.யில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி!

Michaung Cyclone : ஜே.சி.பி.யில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி!

HT Tamil Desk HT Tamil

Dec 05, 2023, 08:16 PM IST

google News
Cyclone Michaung Live Update: மிக்ஜாங் புயல் குறித்த உடனடி செய்திகளை இதில் தெரிந்து கொள்ளலாம்”
Cyclone Michaung Live Update: மிக்ஜாங் புயல் குறித்த உடனடி செய்திகளை இதில் தெரிந்து கொள்ளலாம்”

Cyclone Michaung Live Update: மிக்ஜாங் புயல் குறித்த உடனடி செய்திகளை இதில் தெரிந்து கொள்ளலாம்”

தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை செண்ட்ரலில் இருந்து டெல்லிக்கு செல்லும் ’க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயில்’ நாளை அதிகாலை 1 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

சென்னை செண்ட்ரலில் இருந்து டெல்லிக்கு செல்லும் ’தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்’ நாளை காலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜே.சி.பி.யில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி!

திருமழிசை சிப்காட் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர் - இபிஎஸ்!

EPS : அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் அமீர் கான்,விஷ்ணு விஷாலை படகு மூலம் மீட்ட தீயணைப்புத்துறை!

வீட்டை சூழ்ந்த மழைநீரில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை படகு மூலம் தீயணைப்புத்துறை மீட்டனர்.சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதாக விஷ்ணு விஷால் X தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை.

ஆவின் மூலம் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம்

சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேக்கம் குறைந்து வருகிறது. நீர் தேங்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 32,158 பேர் வெள்ளம் சூழப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம். ஆவின் மூலம் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Formula 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

சென்னை தீவுத்திடல் பகுதியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடக்க இருந்த Formula 4 கார் பந்தயம், மழை பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விநியோகம் தொடக்கம்!

சென்னை நங்கநல்லூரில் மழை நீர் வடிந்த இடங்களில் ஆவின் பால் விநியோகம் தொடக்கம். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பால் வாங்கிச் செல்கின்றனர். பால் விற்பனையகங்களுக்கு வாகனம் மூலமாக பால் கொண்டு சென்று விநியோகம் செய்யப்படுகிறது.

தனியார் மருத்துவமனையை சூழ்ந்த வெள்ளம்!

cyclone michaung : கனமழையால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ளா தனியார் மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நோயாளிகளை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

புயல் பாதிப்பு - 7 ரயில்கள் ரத்து

 Chennai Rains: புயல் பாதிப்புகளால் சென்னை வழியாக செல்லும் 7 ரயில்கள் ரத்து

பெங்களூரு, மைசூர், ஜோலார்பேட்டை செல்லும் 3 ரயில்களின் புறப்படும் இடம் மாற்றம்

சென்னை சென்ட்ரலில் மாலை 3.30 மணிக்கு புறப்படவிருந்த ரயில் காட்பாடியில் மாலை 5 மணிக்கு புறப்படும்

மைசூர் அதிவிரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.45க்கு புறப்படும்: தென்னக ரயில்வே

ஏலகிரி எக்ஸ்பிரஸ் அரக்கோணத்திலிருந்து மாலை 7.05 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு

மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்

Chennai Rains: சென்னை முழுவதும் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாக மெட்ரோ டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிங்கார சென்னை அட்டைகளும் தற்போது செயல்படாத காரணத்தினால், ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்

சாலையில் ராட்சத பள்ளம்

Chennai Rains: மாமல்லபுரம் அருகே ECR கடம்பாடி பகுதியில் சாலையில் ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இரண்டாவது நாளாக கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை - பாண்டிச்சேரி செல்ல வாகனங்களுக்கு தடை.

5000 கோடி ஒதுக்க வேண்டும்

Chennai Rains: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு 5,000 கோடி ரூபாயை மத்திய அரசு தர வேண்டும் - மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை

4 மாவட்டங்களில் நாளையும் விடுமுறை

School Holidays: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளையும் (டிசம்பர் 6) விடுமுறை அறிவிப்பு

நாராயணபுரம் ஏரி உடைந்தது

Chennai Rains: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி கரை உடைந்து நீர் வெளியேறுவதால் சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் பாய்கிறது. 

4 மணி நேரத்தில் கரையை கடக்கும்!

cyclone michaung update: அடுத்த 4 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

உயிரிழப்பு குறைந்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்

Chennai Floods 2023: மிச்ஜாங் புயல் விரைவாக கடந்து செல்லாமல் தொடந்து மழை பெய்துள்ளது. மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டாலும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு உள்ளிட்டவை பெறுமளவு குறைக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் 199 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதுவும் ஏற்பட்டு இருக்க கூடாது; இதனால் வருத்தமடைகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

’செயற்கை வெள்ளம்; இயற்கை வெள்ளம்’

Chennai Floods 2023: அதனை மனதில் வைத்துதான் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்தேங்காமல் இருக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அளித்த ஆய்வின் அடிப்படையில் 4 ஆயிரம் கோடியில் வெள்ள நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம். 

இதனால்தான் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தபோதும் அதன் தாக்கம் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது பெரும் அளவு குறைந்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; தற்போது வந்தது இயற்கை வெள்ளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

Chennai Rains: வரலாறு காணாத பெருமழை நேற்றைய தினம் கொட்டி தீர்த்துள்ளது. மீனம்பாக்கம் 43, பெருங்குடியில் 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பு ஏற்ற பிறகு நவம்பரில் பெரு மழை ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை 

Chennai Rains: மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

சென்னைக்கு 170 கி.மீ தூரம் விலகி சென்ற மிக்ஜாம்!

Chennai Rains: மிக்ஜாம் தீவிர புயல் தற்போது நெல்லூருக்கு வடகிழக்கில் 30 கிமீ, சென்னைக்கு சுமார் 170 கிமீ தொலைவிலும் நிலைக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர பகுதியான பாபட்லாவில் கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 முதல் 58 செ.மீ வரை 

Chennai Rains: நுங்கம்பாக்கத்தில் சராசரி மழை அளவு 5 செமீ ஆக உள்ள நிலையில் தற்போது 58 செமீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கம் சராசரி மழை அளவு 5 செமீ ஆக உள்ள நிலையில் தற்போது 50 செமீ மழை பதிவாகி உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை முதலமைச்சர் ஆய்வு

Chennai Rains: சென்னை பெரியமேடு கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

இயல்பைவிட 29 சதவீதம் கூடுதல் மழை

Chennai Rains: சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 29 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது

மழையால் 8 பேர் உயிரிழப்பு

Chennai Rains: சென்னை மாநகரில் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

மிக்ஜாம் புயல் - மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

cyclone michuang: மிக்ஜாம் புயல் பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்ற மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரி திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க கோரிக்கை.

10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

Chennai Rains: இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல் இடி மின்னல் உடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காட்டுப்பாக்கத்தில் 29 செ.மீ மழை

Chennai Rains: கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் 29 செ.மீ மழை பதிவு, நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ, மீனம்பாக்கத்தில் 19 செ.மீ மழை பதிவு

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமா?

Chennai Rains: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 563 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று (டிசம்பர் 5) லிட்டருக்கு ரூ.102.63, டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கரையை கடக்க தொடங்கியது மிக்ஜாம் புயல்!

Michaung Cyclone Live Update: ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே சற்று நேரத்திற்கு முன்னதாக மிக்ஜாம் புயல் கரையை கடக்கத் தொடங்கியது

அச்சம் வேண்டாம்

Chennai Rains: 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் உபரி நீர். இன்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7709 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 2015ம் ஆண்டு வினாடிக்கு சுமார் 29,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

மின்சார ரயில்கள் நாளையும் ரத்து!

Chennai Rains: மிக்ஜாம்' புயலின் தாக்கம் காரணமாக, சென்னையில் நாளையும் (டிச.5) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

Cyclone Michaung: மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும். மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும். சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கூவம், அடையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Cyclone Michaung: செம்பரம்பாக்கம் ஏரிக்கான உபரி நீர் திறப்பு 8ஆயிரம் கன அடியாக இருப்பதால் அடையாறு, கூவம் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மழைப்பாதிப்பு தொடர்பான உதவி எண்கள் அறிவிப்பு!

Cyclone Michaung: சென்னை மழைப் பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் வாட்ஸ்அப் மூலம் புகார் அளிப்பவர்கள் +91 9445477205 என்ற எண்ணுக்கும்; போனில் அழைத்து உதவி கோருபவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கும் அழைத்து உதவியைக் கேட்கலாம்.

044-25619207;

044-25619206;

044-25619204 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்  எதிரொலி - அண்ணா பல்கலைக்கழகத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

Michaung Cyclone: மிக்ஜாம் புயல் மற்றும் மழைப்பாதிப்பு காரணமாக நாளை முதல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

புழல் ஏரியில் 4ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்!

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் காரணமாக புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் ஏரியில் இருந்து 4,000 கன அடி நீர், உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் இருந்து வெளியாகும் உபரி நீரால் செங்குன்றம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

4 மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு நாளையும் விடுமுறை!

Chennai Rains: அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு பொது நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட அலுவலகங்கள் / பெருநிறுவனங்கள், வாரியங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை 05.12.2023 அன்று (செவ்வாய்கிழமை) மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்த்திறப்பு

Chennai Rains: பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 8,400 கன அடியாக அதிகரிப்பு. இன்று மாலை 4.30 மணியளவில் கொற்றலை ஆற்றுக்கு 1000 கன அடி நீர் திறந்துவிடப்படவுள்ளது. இதனால் கொற்றலை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 60 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

செம்பரம்பாக்கத்தில் 6000 கன அடி திறப்பு 

Chennai Rains:செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

ஏரிக்கு நீர்வரத்து 10,000 கனஅடியை எட்டிய நிலையில், நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

புழல் ஏரியில் நீர்த்திறப்பு அதிகரிப்பு

Chennai Rains: கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4000 கன அடியாக அதிகரிப்பு

நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மழை நீர் புகுந்தது!

Chennai Rains: சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வளரசவாக்கம் அருகே உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் மழை நீர் புகுந்தது.

அடித்து செல்லப்படும் கார்கள்!

Chennai Rains: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை வெள்ளம் அடித்து செல்கிறது.

அடித்து செல்லப்படும் கார்கள்!

Chennai Rains: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை வெள்ளம் அடித்து செல்கிறது.

|#+|

 

சென்னை விமான நிலையம் மூடல்

Chennai Rains:சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடல்

அடுக்குமாடி கட்டடம் தரை இறங்கியது

Chennai Rains: சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கியது.

கட்டடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்.

2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு.

கிண்டி காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் - அமைச்சர் ஆலோசனை

Michaung Cyclone Live Update: மிக்ஜாம் புயல் பாதிப்புகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

தத்தளிக்கும் சென்னை!

Michaung Cyclone Live Update: சென்னை செண்ட்ரல் முதல் கோயம்பேடு வரை செல்லும் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது

சென்னையில் 29 செ.மீ மழை பதிவு

Michaung Cyclone Live Update: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் 29 செமீ மழை பதிவு. மீனம்பாக்கத்தில் 23 செமீ, அடையாறில் 23.5 செ.மீ, கோடம்பாக்கத்தில் 21.8 செ.மீ, சோழிங்கநல்லூரில் 21.3 செ.மீ மழை பதிவு

பேருந்து மீது மரம் விழுந்து விபத்து

Michaung Cyclone Live Update: சென்னை வடபழனி 100 அடி சாலையில் தனியார் பேருந்து மீது அரசமரம் வேரோடு சாய்ந்து விபத்து

விமான சேவைகள் ரத்து

Michaung Cyclone Live Update: சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் சூழந்ததால் 20க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து

செம்பரம்பாக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

Michaung Cyclone Live Update: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 8409 கன அடியாக உயர்வு.

செய்யாறு, வந்தவாசியில் விடுமுறை

Michaung Cyclone Live Update: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

4 மாவட்டங்களில் பொதுவிடுமுறை

Michaung Cyclone Live Update: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பொதுவிடுமுறை, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

14 சுரங்கப்பாதைகள் மூடல்

Michaung Cyclone Live Update: தொடர் மழை காரணமாக சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல், வீடுகளில் மழை நீர் புகுந்தது, பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

23 மாவட்டங்களில் மழை

Michaung Cyclone Live Update: சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

130 கி.மீ தொலைவில் மிக்ஜாங் புயல்

Michaung Cyclone Live Update: சென்னையில் இருந்து 130 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி