தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chinmayi: 'காம வெறியர்களை கேட்கவில்லை' வைரமுத்துவை நேரடியாக தாக்கிய சின்மயி!

Chinmayi: 'காம வெறியர்களை கேட்கவில்லை' வைரமுத்துவை நேரடியாக தாக்கிய சின்மயி!

Mar 09, 2023, 11:15 AM IST

காம வெறியர்களை கேட்கவில்லை பெண் என பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காம வெறியர்களை கேட்கவில்லை பெண் என பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

காம வெறியர்களை கேட்கவில்லை பெண் என பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் மகளிர் தின வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது.

ட்ரெண்டிங் செய்திகள்

Cauvery: ’காவிரி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லையா?’ பிரபல நாளிதழின் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு!

Savukku Shankar ’கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்!’ சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்!

Savukku Shankar: திருச்சி போலீஸ்க்கு கைமாறிய சவுக்கு சங்கர்! ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி!

Anbumani Ramadoss: ’கரகாட்டக்காரன் பட பாணியில் கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்!’ இதுதான் லட்சணமா! விளாசும் அன்புமணி!

" மாலையும் நகையும்

கேட்கவில்லை பெண்;

மதித்தல் கேட்கிறாள்

வீடும் வாசலும்

விரும்பவில்லை பெண்;

கல்வி கேட்கிறாள்

ஆடம்பரம் அங்கீகாரம்

ஆசைப்படவில்லை பெண்;

நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்;

அவளே பாதுகாப்பாள்

ஆண்களையும்

உலக

மகளிர் திருநாள் வாழ்த்து " இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் டுவிட்டை பகிர்ந்து அவரை சாடும் வகையில்

அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது

காம வெறியர்களை கேட்கவில்லை பெண்;

பாதுகாப்பு கேட்க்கிறாள்.

பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்;

நியாயம் கேட்கிறாள்.

I can’t get over how he speaks about women’s lib and safety. The gall. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரபல சினிமா பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்து தன்னிடம் 2005-2006 ம் ஆண்டில் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப்பாடகி சின்மயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார். #metoo என்ற ஹேஸ்டோக்குடன் போடப்பட்ட அவரது பதிவு ட்ரெண்டானது. இது தமிழ் திரையுலகில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இலங்கை தமிழர்களுக்காக வீழமாட்டோம் என்ற ஆல்பத்தில் சின்மயியும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்தனர். இது தொடர்பான வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தின் சூரிக் பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி இந்த விழாவில் தாங்களும் கலந்து கொண்டு பாடியதாக கூறினார்.

விழா முடிந்த பின் எல்லோரும் புறப்பட்ட நிலையில் தன்னையும் தாயாரையும் புறப்பட வேண்டாம் என கூறியதாகவும் அப்போது விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சந்திக்குமாறு வலியுறுத்தியதாகவும் சின்மயி கூறியிருந்தார். மேலும் ஒத்துழைக்காவிட்டால் இந்த தொழிலிலேயே இருக்க முடியாது என்ற மிரட்டியதாக குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் சின்மயி வைர முத்துவின் மகளிர் தின பதிவிற்கு பதிலடி தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி