Krishnagiri Honor Killing: காதல் திருமணம் செய்த மகனை தந்தையே கொலை செய்த கொடூரம்!
Apr 15, 2023, 10:29 AM IST
Krishnagiri Murder:மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தனது தாயை சுபாஷின் தந்தை தண்டபாணி கொடூரமாக கத்தியால் வெட்டி உள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சுபாஷ் மற்றும் அவரது பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த மகனை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உத்தங்கரையில் அருகே கருமாடாபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மகன் சுபாஷ். பட்டதாரியான சுபாஷ் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடன் வேலை பார்த்து வரும் அனுஷா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.
இந்த திருமணத்தை பொருத்தமட்டில் அனுஷா மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சுபாஷின் தந்தை தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தண்டபாணி கடந்த 3 மாதமாக கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சுபாஷ் மற்றும் அனுஷா ஆகியோர் ஊத்தங்கரை அருகே உள்ள தந்தை வீட்டிற்கு வந்துள்ளனர். இதையடுத்து இரவு வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்த தனது மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தனது தாயை சுபாஷின் தந்தை தண்டபாணி கொடூரமாக கத்தியால் வெட்டி உள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சுபாஷ் மற்றும் அவரது பாட்டி கண்ணம்மாள் ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுபாஷின் மனைவி அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பத்தை தொடர்ந்து தண்டபானி தலைமறைவாக உள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணகிரியில் கிட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் நடு ரோட்டில் கழுத்தறுத்து ஆணவ கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்