தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாதக வேட்பாளர் மேனகா நவநீதன்! இனமாகவும் பணமாகவும் துணைநிற்க சீமான் வேண்டுகோள்!

நாதக வேட்பாளர் மேனகா நவநீதன்! இனமாகவும் பணமாகவும் துணைநிற்க சீமான் வேண்டுகோள்!

Kathiravan V HT Tamil

Jan 29, 2023, 07:36 PM IST

google News
Eode East NTK Candidate: ’’ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு என்ற முழக்கத்துடன் இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு இனமாகவும் பணமாகவும் துணைநிற்க தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வேண்டுகோள்’’

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆடைவடிவமைப்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள மேனகா நவநீதன். தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சியில் இணைந்து ஈரொடு கிழக்கு மகளிர் பாசறை இணைச் செயலாளரா பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு என்ற முழக்கத்துடன் இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு இனமாகவும் பணமாகவும் துணைநிற்க தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது

ஈரோடு மரப்பாலத்தில் நடைபெறுகிற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை அறிமுகம் செய்து சிறிது நேரத்தில் உரையாற்ற உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மறைவையொட்டி அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக வேட்பாளராக ஆனந்தும், அமமுக வேட்பாளராக சிவப்பிரசாத்தும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.  பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை மறுநாள் முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மார்ச் 2ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி