தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: ஷாக்! ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திகுத்து.. அதிரடி காட்டிய போலீஸ்!

Crime: ஷாக்! ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திகுத்து.. அதிரடி காட்டிய போலீஸ்!

Karthikeyan S HT Tamil

Aug 06, 2023, 08:06 PM IST

google News
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்செல்வி (47) என்ற பெண்ணை கத்தியால் குத்திய சுப்ரமணியை என்பவரை போலீசார் கைது செய்தனர்

செங்கல்பட்டு விநாயகர் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி தமிழ்செல்வி (47). இந்நிலையில் செங்கல்பட்டு செல்வதற்காக நேற்று இரவு பெருங்களத்தூர் ரயில் நிலையத்துக்கு வந்த தமிழ்ச்செல்வி நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது தமிழ்ச்செல்வியை அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் படுகாயம் அடைந்த தமிழ்செல்வி அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இது தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை வண்டலூர் அருகே இன்று போலீசார் கைது செய்துள்ளனர். சுப்பிரமணியன் என்பவரை தாம்பரம் ரயில்வே போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுப்பிரமணி சாய் பாபா கோயிலில் புதிய வாகனத்துக்கு பூஜை போடுபவர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி