TamilNadu vs Maharastra: மகாராஷ்டிரா நம்பர் ஒன் பொருளாதாரம் அல்ல; மும்பை சீட்டிங்!டி.ஆர்.பி.ராஜா விளாசல்!
Dec 21, 2024, 01:42 PM IST
இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குதான் சேவை துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு யாரோ கொடுக்கும் வேலையை செய்யப்போகிறீர்கள். நம்மாட்கள் எப்போது உற்பத்தி செய்யப்போகிறீர்கள் என கேள்வி
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் 80 ஆம் ஆண்டு விழாவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அதில், தமிழ்நாட்டின் பெருமைகளை பற்றி நான் உறக்க சொல்ல வேண்டும். அதில் நாம் வெட்கப்படவே கூடாது. இந்தியாவின் 2ஆவது பொருளாதாரம் என்று தமிழ்நாட்டை அழைக்கின்றனர். ஆனால் அது முழுக்க முழுக்க தவறு; மும்பை சீட்டிங் செய்கிறது. மகாராஷ்டிராவில் இருந்து அதன் தலைநகர் மும்பையை எடுத்துவிட்டால், மகாராஷ்டிராவில் என்ன உள்ளது. தலைநகரை மையமாக வைத்தே அங்கு வளர்ச்சி உள்ளது. அதே நேரம் புனே போன்ற நகரங்களும் அங்கு உள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் பெரும் உற்பத்தி மற்றும் ஆய்வுகள் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டின் பெருமைகளை உலகிற்கு சொன்னால்தான் உலகம் திரும்பி பார்த்து நமது அடுத்த தலைமுறை திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும்.
தமிழ்நாட்டில் மட்டும் தான் அமைப்பு சார்ந்த துறைகளில் 43 சதவீத பெண்கள் பணி செய்கின்றனர். 13.5 சதவீத உற்பத்தி திறனை தமிழ்நாடு கொண்டு உள்ளது. ஆட்டோ மொபைல், டெஸ்டைல், தோல் பொருட்கள், எலட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது. இந்தியாவின் மொத்த எலட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 35 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்துதான் நடைபெறுகின்றது.
இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குதான் சேவை துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு யாரோ கொடுக்கும் வேலையை செய்யப்போகிறீர்கள். நம்மாட்கள் எப்போது உற்பத்தி செய்யப்போகிறீர்கள். நமது கல்வி நிலையங்களில் வெறும் பட்டங்களை மட்டும் கொடுக்க கூடாது. ஆனால் அங்கு ஆய்வுகள் நடைபெற வேண்டும் என பேசினார்.