தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kushboo Vs Dmk: ’இந்த பூச்சாண்டி எல்லாம் என் கிட்ட வேணாம்! கலைஞர் என் ஆசான்!’ திமுகவுக்கு குஷ்பு எச்சரிக்கை!

Kushboo vs DMK: ’இந்த பூச்சாண்டி எல்லாம் என் கிட்ட வேணாம்! கலைஞர் என் ஆசான்!’ திமுகவுக்கு குஷ்பு எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil

Mar 13, 2024, 04:57 PM IST

google News
“Kushboo vs DMK: பழைய ட்வீட்களை எடுத்து போடுவது எங்கள் டி.என்.ஏ; தற்போதைய பிரச்னைகள் குறித்து பேச திமுகவிடம் எதுவும் இல்லை. திமுக பற்றி எனக்கு நல்லா தெரியும். அந்த தைரியம் உங்கள் தலைவனுக்கும் இல்ல; வேறு யாருக்கும் இல்ல”
“Kushboo vs DMK: பழைய ட்வீட்களை எடுத்து போடுவது எங்கள் டி.என்.ஏ; தற்போதைய பிரச்னைகள் குறித்து பேச திமுகவிடம் எதுவும் இல்லை. திமுக பற்றி எனக்கு நல்லா தெரியும். அந்த தைரியம் உங்கள் தலைவனுக்கும் இல்ல; வேறு யாருக்கும் இல்ல”

“Kushboo vs DMK: பழைய ட்வீட்களை எடுத்து போடுவது எங்கள் டி.என்.ஏ; தற்போதைய பிரச்னைகள் குறித்து பேச திமுகவிடம் எதுவும் இல்லை. திமுக பற்றி எனக்கு நல்லா தெரியும். அந்த தைரியம் உங்கள் தலைவனுக்கும் இல்ல; வேறு யாருக்கும் இல்ல”

தனது பழைய ட்வீட்களை சுட்டிக்காட்டி திமுகவினர் விமர்சித்து வருவது குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். 

பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பட்டம்!

தமிழ்நாட்டில் போதை பொருட்களை ஒழிக்க கோரி பாஜக சார்பில் மார்ச் 11ஆம் தேதி அன்று செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பிச்சை போடுவதால் அவர்கள் வாக்குகளை பெற்று விடலாம் என திமுக நினைக்கிறது என கூறி இருந்தார்.

அசால்டா பிச்சைன்னு சொல்றீங்க!

நடிகை குஷ்புவின் இந்த பேச்சுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், அந்த அளவுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவக்கூடிய உரிமைத்தொகையை நீங்கள் அசால்டா “பிச்சை போடுகிறார்” என்ற வார்த்தையைச் சொல்கிறீர்கள். பிச்சை என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்கு எங்களுடைய தமிழ்நாட்டு பெண்கள் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களும் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்பதை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன் என கீதா ஜீவன் கூறி  இருந்தார். 

நான் பேசியது என்ன? - குஷ்பு விளக்கம்!

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், திமுகவில் உள்ள அத்தனை பேரும் என்னை பற்றி பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நான் எதையும் டெலிட் செய்யவில்லை. நான் ஐடி விங்கையோ, வார் ரூமையோ வைத்து பேசவில்லை. எத்தனை பேர் எனக்கு எதிராக எச்சரிக்கையாக விஷங்கள் சொல்லி இருக்காங்க; குஷ்பு பேசினால் அவ்வளவு பயமா?; குஷ்பு உண்மையை தைரியமாக பேசுவாள்.

டாஸ்மாக் கடைகளை எப்போது குறைப்பீர்கள்?

எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது உங்களுக்கும், எனக்கும், மக்களும் தெரியும். டாஸ்மாக் கடை எண்ணிக்கையை குறைப்பீர்களா? குறைக்கமாட்டீர்களா?; இதனை முதல்வரும், உதயநிதி ஸ்டாலினும் சொன்னது.

ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தலில் உங்கள் கட்சி நிர்வாகியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் எங்களுக்கு எந்த சம்பந்தம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம்.

அந்த தைரியம் உங்க தலைவனுக்கு இல்ல!

பழைய ட்வீட்களை எடுத்து போடுவது எங்கள் டி.என்.ஏ; தற்போதைய பிரச்னைகள் குறித்து பேச திமுகவிடம் எதுவும் இல்லை. திமுக பற்றி எனக்கு நல்லா தெரியும். அந்த தைரியம் உங்கள் தலைவனுக்கும் இல்ல; வேறு யாருக்கும் இல்ல.

தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதற்கு பதிலாக டாஸ்மாக்கை குறைத்தால் பல ஆயிரங்கள் சேமித்து சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியும் என்றுதான் நான் பேசி உள்ளேன். பெண்களை அவதூறு செய்வது, பெண்களை பற்றி தவறாக பேசுவது திமுகவின் டி.என்.ஏ.

பூச்சாண்டி வேலையெல்லாம் குஷ்புவிடம் காட்டாதீர்கள்; நான் தவறு செய்தால் சிறிய குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக்கேட்பேனே தவிர ஓடமாட்டேன்.

என்னுடைய ஆசான் தலைவர் கலைஞர்!

அரசியல் நாகரீகம், மேடை நாகரீகம், தைரியமாக பேசக்கூடிய விஷயங்களை என்னுடைய ஆசான் தலைவர் கலைஞர் சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால் சொல்லிக்கொடுத்த விஷயங்களை நான் என்றும் மறக்கமாட்டேன்.

உங்கள் புது தலைவருக்கு கீழ் நீங்கள் இப்படி பேச வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு புரிகிறது. அதனால் உங்கள் மீது எனக்கு கோபம் ஏற்படாமல், பரிதாபமே ஏற்படுகிறது.

உண்மை பேசுவதற்கு தைரியம் வேண்டும்; கல் தூக்கி வீசுவீர்கள், புடவையை பிடித்து இழுப்பீர்கள், ஆனால் பெண்கள் சமுதாயத்தில் அந்தஸ்துக்கு கொண்டுபோய் அழகு பார்க்க வேண்டுமென்ற எண்ணம் திமுகவுக்கு சுத்தமாக கிடையாது. நான் எந்த அளவுக்கு பெண்களுக்காக பேசுகிறேன் என்பது மக்களுக்கு தெரியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி