தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Neet: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம்; ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

NEET: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம்; ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

Karthikeyan S HT Tamil

Jan 11, 2023, 04:01 PM IST

google News
NEET Impersonation Case: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
NEET Impersonation Case: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

NEET Impersonation Case: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் ஏஜெண்டாக செயல்பட்ட இருவருக்கும் கடும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மதுரையில் தங்கியிருந்து சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் காலை மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் ஜாமீன் கோரி ரகுவன்ஷ் மணி, சகேட் குமார் சிங் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். 

அதில், " 2019 ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர், நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏஜென்டாக் செயல்பட்டதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நாங்கள் இருவரும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டோம். வழக்கு விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர்கள் இருவருமே மாணவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் தேர்வு எழுத துணை செய்துள்ளனர். விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது" என எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, "இருவரும் மதுரையில் தங்கியிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தினமும் காலை 10:30 மற்றும் மாலை 05:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டுகளை வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் இல்லையெனில் உரிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் கார்டின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தலைமறைவாகவோ, சாட்சிகளை கலைக்கவோ செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி