தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kachchathivu Issue: ’கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது’ உயர்நீதிமன்ற கிளை திட்டவட்டம்!

Kachchathivu issue: ’கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட முடியாது’ உயர்நீதிமன்ற கிளை திட்டவட்டம்!

Kathiravan V HT Tamil

Aug 31, 2023, 05:33 PM IST

google News
”1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனுதாரர் வாதம்”
”1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனுதாரர் வாதம்”

”1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனுதாரர் வாதம்”

கச்சத்தீவு விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் கச்சத்தீவை மீட்கக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் இந்தியா விடுதலை அடைந்த போது கச்சத்தீவு ராமநாதபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் இந்தியா - இலங்கை உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த உடன் படிக்கையின் படி கச்சதீவு பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களை எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று உள்ளது. 

ஆனால் உடன்படிக்கைக்கு மாறாக 1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

இதுவரை தமிழக மீனவர்கள் பலகோடி மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். மேலும் 2013ஆம் ஆண்டு முதல் 111 மீனவர்கள் இலங்கை கடற்படயால் கொல்லப்பட்டுள்ளனர். 

கடந்த 19-6-2023இல் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 22 மீனவர்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசு உத்தரவிட வேண்டும். கச்சத்தீவு உடன்படிக்கையை இலங்கை மீறி உள்ளதால் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கங்காபூவாலா, குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறையில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது’ என்றார்.

அரசுத்தரப்பின் விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட முடியாது என கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி