தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops Vs Eps: ’அதிமுக சின்னத்தை பயன்படுத்த கூடாது!’ ஓபிஎஸின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

OPS vs EPS: ’அதிமுக சின்னத்தை பயன்படுத்த கூடாது!’ ஓபிஎஸின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Kathiravan V HT Tamil

Jan 11, 2024, 10:51 AM IST

google News
”அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பயன்படுத்தப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு”
”அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பயன்படுத்தப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு”

”அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பயன்படுத்தப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு”

அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் கட்சி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடையை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து இரண்டு முறை அவகாசம் கேட்கப்பட்டது. 

கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று நடந்த வழக்கு விசாரணையில், ஓபிஎஸ் தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு கொண்டு வர இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.

ஓபிஎஸை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் குறுகிய கால அவகாசம் வேண்டும். தீபாவளி முடிந்த பிறகு எங்கள் தரப்பில் இருந்து பதில் மனுவை தாக்கல் செய்வோம் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி கூறி இருந்தார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, எத்தனை முறைதான் மாற்றி மாற்றி வழக்குகளை தொடர்ந்து கொண்டு இருப்பீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், ஓபிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் இதுவரை எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காததால் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். 

தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் மேல் முறிஅயீடு செய்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க கோரிய ஓபிஎஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், அவரது மனுவையை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

அடுத்த செய்தி