தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Update: புயல் சின்னமாக வலுவடைகிறது - வானிலை ஆய்வு மையம்!

Rain Update: புயல் சின்னமாக வலுவடைகிறது - வானிலை ஆய்வு மையம்!

Jan 30, 2023, 02:18 PM IST

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடைகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடைகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடைகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக இன்று வலுவடைய உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

அந்த அறிக்கையில்," தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் கிழக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிறைவு வருகிறது. இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடித்துள்ளது.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறி வருகிறது. பின்னர் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று வலுவடைந்து வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி இலங்கை கடற்பகுதிகளைச் சென்றடையக் கூடும்.

இன்றைய காலை நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மண்டலமாக வலுவடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வரும் பிப்ரவரி 2ஆம் தேதி பெய்யும். குறிப்பாகப் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதேசமயம் தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாபிக்ஸ்