Lok Sabha Election 2024 Results: தூத்துக்குடியில் யார் முன்னிலை? இராமநாதபுரத்தில் யாருக்கு பின்னடைவு?-தற்போதைய நிலவரம்!
Jun 04, 2024, 10:01 AM IST
Lok Sabha Election 2024 Results: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியின் முன்னிலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருகிறார். இதேபோல், முதல் சுற்றில் திமுக 15 ஆயிரத்து 952 வாக்குகளும், அதிமுக 4038 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் 3600 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3131 வாக்குகளும் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி முன்னிலை நிலவரம்
திமுக : 15,953
அதிமுக : 4038
தமாக: 3690
நாதக : 1423
இராமநாதபுரம் மக்களவை தொகுதி முன்னிலை நிலவரம்
இராமநாதபுரத்தில் திமுக கூட்டணி , இந்திய முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி 2400 வாக்குகளும், பரமக்குடி தொகுதியில் 1710 வாக்குகளும், முதுகுளத்தூர் தொகுதியில் 1215 வாக்குகளும் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி தற்போதைய நிலவரம்
திமுக - 23,820
அதிமுக - 13,576
அமமுக - 13,525
நாம் தமிழர் - 3383.
திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 10244 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2024
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
களத்தில் 950 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிற்கு வாய்ப்பு உள்ளதா?
இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை கோவையில் களம் காண்கிறார். அதேபோல் அக்கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தர் ராஜன் தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த நிலையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு மத்திய சென்னையில் போட்டியிட்டார்.
எதிர்பார்ப்பில் மக்கள்
அடுத்த 5 ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஆட்சி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். உலகமே உற்று நோக்கும் இந்தியாவில் ஏற்கனவே 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா.. பிரதமர் மோடி 3 ஆவது முறையாக ஆட்சி அமைப்பாரா.. அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இணைந்துள்ள இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி மக்களிடையே உள்ளது.
கடும் போட்டி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
.
டாபிக்ஸ்