தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tasmac: மதுபானங்களின் விலை உயர்வு.. டாஸ்மாக் அறிவிப்பால் மதுப்பிரியர்கள் ஷாக்!

Tasmac: மதுபானங்களின் விலை உயர்வு.. டாஸ்மாக் அறிவிப்பால் மதுப்பிரியர்கள் ஷாக்!

Karthikeyan S HT Tamil

Jan 29, 2024, 09:41 PM IST

google News
சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்களின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்களின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்களின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சாதாரண மற்றும் நடுத்தர வகை குவாட்டர் 10 ரூபாயும், உயர்தர குவாட்டர் 20 ரூபாயும், பீர் வகைகளுக்கு 10 ரூபாயும் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் கூடுதல் விலை கொடுத்து மதுவாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த புதிய விலை உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

அதன்படி, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானக் கடைகள் அரசின் அனுமதி பெற்று மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. டாஸ்மாக் மதுவிற்பனை தான் தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ. 147 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது வரும் பிப்.1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது வரும் பிப்.1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி