Navratri 8th day:கமல வாகனத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்!
Oct 03, 2022, 03:51 PM IST
குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயிலின் தசரா திருவிழாவில் எட்டாம் திருநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகளில் நவராத்திரி திருநாளும் ஒன்று. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நம் நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூன்று தேவிகளுக்கும் மூன்று நாட்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்பது நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவில் எட்டாம் நாள் இன்று இரவு 10 மணிக்குக் கொண்டாடப்பட உள்ளது.
கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் முத்தாரம்மன் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்க உள்ளார். இந்நிலையில் இன்று அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், கலை நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடைபெறும்.
கோயிலின் திருவிழாவுக்காகப் பக்தர்கள் விரதமிருந்து தங்களுக்குப் பிடித்த வேடமிட்டு ஊர் ஊராகச் சென்று அம்மனுக்காக காணிக்கை வசூல் செய்வார்கள். திருவிழாவை ஒட்டி இதற்காகத் தசரா குழு அமைக்கப்பட்டு தாரை, தப்பட்டை, காவடி, கரகம், கோலாட்டம், மயிலாட்டம் எனக் கிராமிய கலைகள் அனைத்தும் இந்த விழாவில் இடம் பெறும்.
டாபிக்ஸ்