தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode By Election: மகத்தான வெற்றி பெறுவார் ஈ.வி.கே.எஸ்- கே.எஸ்.அழகிரி பெருமிதம்!

Erode By Election: மகத்தான வெற்றி பெறுவார் ஈ.வி.கே.எஸ்- கே.எஸ்.அழகிரி பெருமிதம்!

Divya Sekar HT Tamil

Mar 02, 2023, 10:17 AM IST

google News
Erode East Byelection : ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Erode East Byelection : ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Erode East Byelection : ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உள்ளிட்ட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.

அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்து முடிந்த நிலையில் மொத்தம் பதிவான 397 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

2ஆவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ள நிலையில் நாம் தமிழர், தேமுதிகவுக்கு ஒரு தபால் ஓட்டு கூட கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து மின்னனு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.அதன்படி காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை உள்ளார்.

10 மணி நிலவரப்படி

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - 19,867

தென்னரசு - 7,324

நாம் தமிழர் - 1013

தேமுதிக - 157 - வாக்குகள் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஈரோடு இடைதேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாங்கள் கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்துள்ளோம். எங்களை எதிர்த்து நிற்கும் அதிமுக சஞ்சலத்தில் உள்ளனர். அவர்களால் அவர்களது அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. எனவே சஞ்சலத்தில் உள்ள, தன்னம்பிக்கையற்ற கூட்டணியை மக்கள் விரும்பமாட்டார்கள்.

எனவே எங்களது கூட்டணியே மகத்தான வெற்றி பெரும். மூன்றாவது அணி கூடாது, காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி சந்தர்ப்பாவாதத்தை உருவாக்கி விடும். இந்த மூன்று வார்த்தைகளும் முதல்வர் சொன்ன முத்தான வார்த்தைகள்” எனக் கூறினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி