தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ks Alagiri: அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்த கே.எஸ்.அழகிரி!

KS Alagiri: அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்த கே.எஸ்.அழகிரி!

Karthikeyan S HT Tamil

Mar 19, 2023, 11:27 PM IST

google News
KS Alagiri:அதிமுக - பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
KS Alagiri:அதிமுக - பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

KS Alagiri:அதிமுக - பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

தமாகா, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா மதுரை காளவாசல் பகுதியில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காங்கிரசில் இணைந்தனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கே.எஸ். அழகிரி காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய பாஜக , அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. நமது வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் குறித்த கேள்விக்கு நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவு திமுக அரசுக்கு முதல்வர் செயல்பாட்டுக்கும் மக்கள் தந்திருக்கும் அங்கீகாரமாக பார்க்கிறேன்.

அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி தலைவர்கள் வேகமாகவும், ஆர்வத்தோடும் வேலை செய்தனர். மக்கள் தந்திருக்கும் பெருவாரியான தீர்ப்பு என்பது மக்கள் செல்வாக்கு திமுக அரசுக்கும், அபரிவிதமாக இருக்கிறது என இடைத்தேர்தல் சொல்கிறது. நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

மதுரை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அக்கட்சியின் வர்த்தக பிரிவு மாநில பொதுச் செயலாளர் நல்லமணி தலைமையில் வரவேற்பு அளித்தனர்.

மேலும், அதிமுக உயிர் வாழ போராடும் சூழலில் தங்களது அடையாளம், அதிகார பங்கீட்டுக்காக தொடர்ந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். இந்தச் சூழலில் இன்றைக்கு திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றிப் பயணம் என்பது பாராளுமன்றத் தேர்தலிலும் வெல்லும்.

தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அவர்களது கூட்டணி தனி நபர்களை மையமாகக் கொண்டது. எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையிலானது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் தேவை இருப்பதால் வரவழைக்கப்படுகின்றனர்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கோ, கட்சியின் கொள்கைக்கோ ஆட்கள் வருவதில்லை. பணம் கொடுத்துத்தான் ஆட்களை அழைத்து வருகின்றனர். அரசியலில் பணம் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியெனில் மாநில முதல்வர்களாகவும், பிரதமராகவும் அதானி, அம்பானி போன்றவர்கள் தான் வர முடியும். மன்மோகன் சிங் போன்றவர்கள் எப்படி பிரதமராக முடியும்? பணம் மட்டும் அரசியல் அல்ல. அரசியலுக்கு பணமும் ஒரு தேவையாக இருக்கிறது” என தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி