Rain Alert: ’மக்களே உஷார்! திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலார்ட்!’
Dec 18, 2023, 11:51 AM IST
”கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகி உள்ளது”
அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓஇரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய தொடர் மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 69 செ.மீ, மூலக்கரைப்பட்டியில் 61 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 55 செ.மீ செ.மீ, கோவில்பட்டியில் 53 செ.மீ, குண்டூர் அணை பகுதியில் 51 செ.மீ, ஊத்து பகுதியில் 50 செ.மீ, நாலுமுக்கு பகுதியில் 47 செ.மீ, பாளையங்கோட்டையில் 44 செ.மீ, அம்பாசமுத்திரத்தில் 43 செ.மீ, மணியாச்சியில் 42 செ.மீ, சேரன்மாதேவியில் 41 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன்படி இப்பகுதியில் 21 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. நேற்று முதல் பெய்யும் வரலாறு காணாத மழை காரணமாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது.