தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanimozhi Mp: சிங்கப்பூர் சென்ற கனிமொழி.. மருத்துவமனையில் கணவர்.. என்ன ஆச்சு?

Kanimozhi MP: சிங்கப்பூர் சென்ற கனிமொழி.. மருத்துவமனையில் கணவர்.. என்ன ஆச்சு?

Divya Sekar HT Tamil

Mar 12, 2023, 09:51 AM IST

google News
திமுக எம்.பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக எம்.பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக எம்.பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அரவிந்தனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். தற்போது அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

அவரது உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி