’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு!’ சிபிஐ விசாரித்தால் என்ன தப்பு? தமிழக அரசை விளாசிய நீதிமன்றம்!
Dec 17, 2024, 06:24 PM IST
மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. எதிர்மனுதாரர்களின் வாதம் சரியாக உள்ளது. சிபிஐ விசாரணையால் என்ன தவறு உள்ளது என்று கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராய மரணத்தில் 68 பேர் உயிரிழந்த நிலையில் அதிமுக, பாஜக, பாமக சார்பில் சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
4 மாநிலங்கள் தொடர்புடைய இந்த வழக்கில் முதலமைச்சரே நேரடியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளார். பல மாநிலங்கள் இந்த வழக்கு தொடர்பு உள்ளதால் சிபிசிஐடி விசாரணையை விட சிபிஐ விசாரணைதான் உகந்ததாக இருக்க்கும்.
மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. எதிர்மனுதாரர்களின் வாதம் சரியாக உள்ளது. சிபிஐ விசாரணையால் என்ன தவறு உள்ளது என்று கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஜூன் 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விவகாரங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
கைது செய்யப்பட்டோர் விவரம்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா, கள்ளச்சாராயம் விற்பனைக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டதுடன், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.
சிபிஐ விசாரணை கோரிய எதிர்க்கட்சிகள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கலும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.