தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு!

கரணம் அடித்தபோது மயங்கிவிழுந்த கபடி வீரர் உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil

Aug 16, 2022, 01:14 PM IST

ஆரணியில் பயிற்சியின் போது மயங்கி விழுந்த கபடி வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரணியில் பயிற்சியின் போது மயங்கி விழுந்த கபடி வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரணியில் பயிற்சியின் போது மயங்கி விழுந்த கபடி வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை : ஆரணி களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(34). கபடி வீரரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி களத்துமேட்டு தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Weather Update: ‘8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’

EPS, DMK Government: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை..இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால்- விளாசும் இபிஎஸ்!

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

இதனையொட்டி, கபடி போட்டி நடைபெற இருந்த நிலையில், இதற்காக களத்துமேட்டு தெருவை சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட கபடி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வினோத்குமார் கோயில் முன்பு கரணம் அடித்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு வேலுர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, வினோத் குமார் கரணம் அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

டாபிக்ஸ்