Jos Alukkas Burglary:ஆத்தி இத்தனை நகைகளா? ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளை போன நகைகள் பற்றிய விபரம்!
Nov 29, 2023, 10:12 AM IST
மொத்தமாக 200 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் , ரைவம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது ஏசி வென்டிலேட்டர் மூலம் கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஏசி வென்டிலேட்டர் மூலம் கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து நேற்று (நவ.28) காலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருடு போன நகைகளின் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் திருடப்பட்ட நகைகளின் பட்டியல்
டைமண்ட், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருக்கின்றன
டைம்ண்ட் நகைகளின் விவரங்கள்
8 ரிங்கள், 5 தாலிக்கொடிகள், 5 நக்லஸ், 3 ஜோடி ஸ்டட்கள், 1 டாலர்
பிளாட்டின நகைகளின் விவரங்கள்
2 சைன்கள், 12 ப்ரேஸ்லெட்கள்
தங்க நகைகளின் விவரங்கள்
35 சைன்கள், 7 வளையல்கள், 25 பிரேஸ்லட்டுகள், 21 நக்லஸ்கள், 30 கல் பதிந்த நக்லஸ் நகைகள் , 27 தங்க நகைகளுக்கான இணைப்பு பேக் சைன்கள், 4 ஹாரோஸ்கோப் வளையல்கள், 4 டாலர்கள், 18 தாலிகள், 21 மோதிரங்கள், 3 ஜோடி தோடுகள், 2 ஜோடி கல் வைத்த மோதிரங்கள், 1 சைன் (18 கேரட்), 5 பிரேஸ்லட் (18 கேரட்)
மொத்தமாக 200 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீஸார் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். நகைகள் திருடுபோனதை அடுத்து அந்த நகைக்கடை தற்போது மூடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது ஐ.பி.சி. 454, 457, 380 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 தனிப்படை போலிசார் விசாரணையில் களமிறங்கி உள்ளனர்.
கோவையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை திருட்டு- 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் குற்றவாளியை பிடித்து விடலாம் என மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள வணிக நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வரும் காந்திபுரம் சாலையில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்