10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா? கிளம்புங்க அஞ்சல் துறையில் வேலைக்கு
Jan 21, 2023, 09:00 AM IST
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்களுக்கான நேர்காணல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
சென்னை திநகரில் உள்ள மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் நாளை மறுநாள் (ஜனவரி 23ம் தேதி) அஞ்சல் ஆயுள் காப்பீட்டு – கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
யார் கலந்துகொள்ளலாம் –
சுய தொழில் செய்யும் அல்லது வேலையில்லா இளைஞர்கள் அல்லது ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள் அல்லது முகவர்கள். அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இந்த நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை அல்லது கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் -
ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி உள்ளவர்கள், சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதேபோல், இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
கல்வி தகுதி –
குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு –
18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் நாளை மறுதினம் (ஜனவரி 23ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் –
எண். 2, சிவஞானம் சாலை,
தி-நகர், சென்னை – 17 (பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்ட அலுவலகம்.
தேவைப்படும் ஆவணங்கள் –
மார்பளவு புகைப்படங்கள் – 3, வயதுசான்று - அசல் மற்றும் நகல் 2, முகவரி மற்றும் கல்விச்சான்று, நேர்காணலுக்குப்பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்