தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jewel Theft: முகமூடியுடன் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு - அந்தியூர் அருகே பரபரப்பு

Jewel Theft: முகமூடியுடன் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு - அந்தியூர் அருகே பரபரப்பு

Jun 29, 2023, 07:40 AM IST

google News
வீட்டுக்கு தனியாக சென்ற பெண்ணை பின்தொடர்ந்த முகமூடி கொள்ளையன், கத்தியை காட்டி தாலி சங்கிலியை வலுகட்டாயமாக பறித்த சம்பவம் அந்தியூர் அருகே நிகழ்ந்துள்ளது. இதில் பெண்ணுக்கு கத்தி குத்து பட்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மனைவி தங்கம்மாள் (47). கிருஷ்ணசாமி, கோவிலூர் பகுதியில் மனைவியுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார்.

இதையடுத்து கடந்த இரு நாள்களுக்கு முன் இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு கிளம்பியுள்ளனர். அப்போது கிருஷ்ணசாமி கோவிலூர் அருகே தோட்டத்துக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தங்கம்மாள் மட்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். இதை கவனித்த அடையாளம் தெரிய நபர், முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு கத்தியுடன் தங்கம்மாளை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து தங்கம்மாள் வீட்டு்க்குள் சென்றதும், வீட்டின் உள்ளே நைசாக புகுந்த அந்த நபர், தன்னிடமிருந்த கத்தியை காட்டி தாலி சங்கிலியை கழற்றி கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். இதற்கு விடாபிடியாக தங்கம்மாள மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் தனது கத்தியால் தாலிசங்கிலியை அறுக்க முயன்றுள்ளார்.

இதை தங்கம்மாள் தடுக்க முயன்றபோது, முகத்தில் கத்தி பட்டு காயமடைந்தார். பின் வலியால் துடித்தபடி அவர் கீழே சாய்ந்தார். அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு் முகமூடி கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதற்கிடையே தோட்டத்துக்கு சென்ற கிருஷ்ணசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி ரத்த காயத்துடன் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தங்கம்மாள் நடந்த விவரங்களை கூறிய நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தங்கம்மாள் வெள்ளிதிருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மோப்ப நாய் வரழைத்து சோதனை நடத்தினர்.

இந்த கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்ணை பின் தொடர்ந்து அவரது வீடு புகுந்து, கத்தி காட்டி மிரட்டி நகை பறித்த சம்பவம் அந்தியூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி