தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Irfan's Gender Reveals Video: இர்பான் வீட்டில் மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை! அலுவலத்தில் நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை!

Irfan's Gender Reveals Video: இர்பான் வீட்டில் மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை! அலுவலத்தில் நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை!

May 22, 2024, 01:23 PM IST

google News
Irfan's Gender Reveals Video : இந்தியாவில் அமலில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்ட பிரபல யூடியூபர் இர்பான் இல்லத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் சுமார் அரைமணி நேரம் வரை விசாரணை நடத்தி உள்ளனர்.
Irfan's Gender Reveals Video : இந்தியாவில் அமலில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்ட பிரபல யூடியூபர் இர்பான் இல்லத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் சுமார் அரைமணி நேரம் வரை விசாரணை நடத்தி உள்ளனர்.

Irfan's Gender Reveals Video : இந்தியாவில் அமலில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்ட பிரபல யூடியூபர் இர்பான் இல்லத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் சுமார் அரைமணி நேரம் வரை விசாரணை நடத்தி உள்ளனர்.

Irfan's Gender Reveals Video : இந்தியாவில் அமலில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தைகயின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்ட பிரபல யூடியூபர் இர்பான் இல்லத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் சுமார் அரைமணி நேரம் வரை  விசாரணை நடத்தி உள்ளனர்.

பிரபல யூடியூபர் இர்பானுக்கு ஆலியா என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடத்தது. 

இந்நிலையில் தற்போது இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் என்ன என்பது குறித்து வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிய இந்த தம்பதி துபாய்க்கு சென்று அங்கு தனது மனைவியின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து இர்பான் அறிந்து கொண்டார்.

குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பதற்கு இந்தியாவில் இது அனுமதி கிடையாது. வெளிநாட்டில் இது சாதாரணம், நமது ஊரில் கூட இது சாதாரணமாக இருந்தது ஆனால் அதற்கு பிறகு இது நிறுத்தப்பட்டு விட்டது. 1993இல் நான் பிறக்கும்போது கூட நான் என்ன பாலினம் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். ஆனால் அதற்கு பிறகு இதை அரசு தடை செய்தது’ என்று இர்பான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்கிறார். அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்கிறார். இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார். இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை இர்பான் அறிவித்தார்.

இர்பான் மீது நடவடிக்கை

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டத்தை மீறி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த நிலையில், Youtuber இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு, காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல்கள் வெளியானது இந்த நிலையில்  இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்து இருக்கிறது. இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை இந்தக்குழு பரிந்துரையாக அளிக்கும் என செய்திகள் வெளியானது.

மன்னிப்பு கேட்ட இர்பான்

இந்த விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கோரி உள்ளார். தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளிடம், நான் வீடியோ வெளியிட்டது தவறுதான். அற்காக நான் ஒரு மன்னிப்பு கடிதம் வெளியிட தயாராக இருக்கிறேன். மன்னிப்பு வீடியோவும் வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் மீதான நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

இர்பான் இல்லத்தில் சுகாதாரத்துறை விசாரணை

இந்நிலையில் நுங்கம் பாக்கத்தில் உள்ள இர்பான் இல்லத்தில் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று  விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவரது அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை டிஎஸ்பி மற்றும் அதிகாரிகள் இர்பானிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு சுகாதாரத்துறையின் நோட்டீஸ் அவரிடம் நேரடியாக வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் அதிகாரிகளிடம் தான் செய்தது தவறு என இர்பான் மன்னிப்பு கோரினார். மேலும் இது குறித்து மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இர்பான் மீதான மேல் நடவடிக்கை என்ன என்பது குறித்து விசாரணை குழு முடிவெடுக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை