தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Iraianbu Letter : சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்திடுக- இறையன்பு!

Iraianbu letter : சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்திடுக- இறையன்பு!

Divya Sekar HT Tamil

Dec 23, 2022, 08:13 AM IST

google News
சொத்து மதிப்பினை சமர்ப்பிக்க தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய காரணத்தை கூற வேண்டும் . இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இறையன்பு தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பினை சமர்ப்பிக்க தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய காரணத்தை கூற வேண்டும் . இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இறையன்பு தெரிவித்துள்ளார்.

சொத்து மதிப்பினை சமர்ப்பிக்க தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய காரணத்தை கூற வேண்டும் . இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை : சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்திட வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் , ”ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளும் அவர்களின் அசையா சொத்துக்கள் பற்றிய முழு விவரங்களையும் அளிக்கும் படிவத்தில் ஆண்டு வருமானத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அவருக்குப் பரம்பரையாகப் பெற்ற அல்லது அவருக்குச் சொந்தமான அல்லது வாங்கிய அல்லது குத்தகைக்கு அல்லது அடமானத்தில் வைத்திருக்கும் சொத்து, அவருடைய சொந்தப் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ அல்லது வேறு எந்த நபரின் பெயரிலோ. 16.02.1960 தேதியிட்ட OM எண்.8/9/60-AIS(III) மற்றும் 04.01.1994 தேதியிட்ட OM எண்.11017/74/93-AIS(III), இந்த விதியின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வருடாந்திர அசையாச் சொத்துக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கூறிய விதிகளின் படி சொத்து மதிப்பினை சமர்ப்பிக்க தவறும் ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய காரணத்தை கூற வேண்டும் . இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 - 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய சுற்றுசூழல் அமைச்சராக இருந்த ஆ.ராசா, கோயம்புத்தூரில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், அந்த நிலம் பினாமி நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு சாதகமாக சுற்றுசூழல் சான்று வழங்குவதற்காக லஞ்சமாக பணம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் ஆ.ராசா பினாமி நிறுவனத்தின் பெயரில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த ரூ.55 கோடி மதிப்பிலான இந்த நிலம் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து எனவும், எனவே அதை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆ.ராசாவி தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் நிறுவனம் தொடங்கியதில் இருந்து எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் நிறுவனத்தில் பெறப்பட்ட முழுப் பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் இருந்து பெறப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, கோவையில் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதையும் படிங்க : திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி