தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Result: ஈரோடு இடைத்தேர்தல் - சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் இதோ!

Erode East Result: ஈரோடு இடைத்தேர்தல் - சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Mar 02, 2023, 02:47 PM IST

google News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வரை 7 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,604 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 1,017 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி 2 சுற்றுகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியான நிலையில், போட்டியிட்ட 77 பேரில் 12 வேட்பாளர்களுக்கு இதுவரை ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை என்றும், அவர்களது கணக்கு பூஜ்யமாகவே இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வெளியாகியுள்ள சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் இதோ..

  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 398 தபால் வாக்குகளில் 25 வாக்குகள் செல்லாதவை.
  • சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு 2 தபால் வாக்குகள் கிடைத்துள்ளன. தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஒரேயொரு தபால் வாக்கு மட்டுமே கிடைத்தது.
  • இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 67 பேருக்கு ஒரு தபால் வாக்கு கூட கிடைக்கவில்லை.
  • முதல் இரண்டு சுற்றுகள் வரை தேமுதிக வேட்பாளரை விட சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா என்பவர் 40 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
  • கபாகாந்தி, கிருஷ்ணமூர்த்தி, சசிகுமார், முனியப்பன், குணசேகரன், குமார் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் முதல் 2 சுற்றுகளில் 1 வாக்கு கூட பெறவில்லை.
  • ராஜேந்திரன், பிரதாப்குமார் ஆகிய இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் 4 சுற்றுகள் வரை ஒரு வாக்கு கூட பெறவில்லை.
  • மொத்தம் உள்ள 77 வேட்பாளர்களில் 45 பேர் 4 சுற்றுகள் நிலவரப்படி ஒற்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தனர்.
  • 5 சுற்றுகள் நிலவரப்படி சுயேச்சை வேட்பாளர்களில் அதிகபட்சமாக முத்து பாவா என்பவர் 290 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
  • 5 சுற்றுகள் முடிவில் நோட்டாவுக்கு 147 வாக்குகள் கிடைத்துள்ளன.
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் டெபாசிட் தொகையை திரும்பப் பெற 28,000 வாக்குகளை பெற வேண்டும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை