தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Independence Day: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு, நலத்திட்ட உதவிகள்

Independence day: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு, நலத்திட்ட உதவிகள்

I Jayachandran HT Tamil

Aug 15, 2022, 03:36 PM IST

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், அரசு ஊழியர்களுக்கு மதுரையில் விருதுகள் வழங்கப்பட்டதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், அரசு ஊழியர்களுக்கு மதுரையில் விருதுகள் வழங்கப்பட்டதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், அரசு ஊழியர்களுக்கு மதுரையில் விருதுகள் வழங்கப்பட்டதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

மதுரை: 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

இந்தியா முழுதும் 75 சுதந்திர தினம் நிறைவு பெற்று, 76 வது சுதந்திர தினம் தொடக்கம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவுகளின் மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்

இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு, மகளிர் குழு கடன், விலையில்லா தேய்ப்பு பெட்டி, மீன் வளர்ப்பு என 67,00,922 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை, வணிக வரித்துறை, கால்நடைத்துறை, வேளாண்துறை, போக்குவரத்து துறை சமூக ஆர்வலர்கள் என 250 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்தார். 7 பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

நிகழ்வில் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி சிவ பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி