தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jayakumar About Ptr: ’அதிமுகவிற்கு பிடிஆர் வந்தால் அங்கீகரிப்போம்’ ஜெயக்குமார் பேட்டி

Jayakumar About PTR: ’அதிமுகவிற்கு பிடிஆர் வந்தால் அங்கீகரிப்போம்’ ஜெயக்குமார் பேட்டி

Kathiravan V HT Tamil

May 11, 2023, 04:45 PM IST

google News
திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பிடிஆர் என தெரிவித்தனர். இப்போது அவருக்கு அறிவும் ஆற்றலும் இல்லையா என கேள்வி
திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பிடிஆர் என தெரிவித்தனர். இப்போது அவருக்கு அறிவும் ஆற்றலும் இல்லையா என கேள்வி

திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பிடிஆர் என தெரிவித்தனர். இப்போது அவருக்கு அறிவும் ஆற்றலும் இல்லையா என கேள்வி

எம்ஜிஆர் நடித்து வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்த ஐம்பது ஆண்டுகள் நிறைவை ஒட்டி சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்களுக்கு இனிப்புகள் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுங்கட்சியாக திமுக இருந்த போது உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகாமல் இருப்பதற்கு பல தடங்கல்களை தந்தனர். அதனையும் மீறி படம் வெளியாக வெற்றிப்படமாக அமைந்தது. போஸ்டர் ஒட்டாமல் வெற்றி படமாக அமைந்த ஒரே படம் உலகம் சுற்றுப் வாலிபன் படம் தான் என தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பால்வளத் துறை அமைச்சர் நாசருக்கு பால் ஊற்றி விட்டனர் என்றும், தமாஷ் தர்பார் கூட்டத்தில் இன்னும் சிலர் உள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது பிடிஆர் போல பொருளாதார வல்லுநர் இல்லை என தெரிவித்தனர். அறிவும், ஆற்றலிலும் சிறந்தவர் பிடிஆர் என தெரிவித்தனர். இப்போது அவருக்கு அறிவும் ஆற்றலும் இல்லையா என கேள்வி எழுப்பினார்.

30ஆயிரம் கோடி ஊழல் என்று ஆடியோவில் பேசியது உண்மையாகத்தான் இருக்கும், ஆடியோ வெளியானால்தான் அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது என முதல்வரே உறுதிப்படுத்துவது போல் உள்ளது. ஆடியோ குறித்து முதல்வரும், பிடிஆரும் விளக்கம் கொடுத்தாலும் டம்மியாக தான் இப்போது வைக்கப்பட்டிருக்கிறார்.

ஜமின்தார் முறையில் திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது தனக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்பதற்காகவே அதற்கேற்றார் போல் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும், பிடிஆர், ஆவடி நாசர் ஆகியோரை அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கவில்லை, ஆனால் வந்தால் அங்கீகரிப்போம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

அடுத்த செய்தி