தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tvk Vs Ntk: ’பெரியார் சொன்ன எல்லாத்துக்கும் ஓகேவா? வாய் திறப்பாரா விஜய்?’ தவெகவை லாக் செய்த இடும்பாவனம் கார்த்தி!’

TVK Vs NTK: ’பெரியார் சொன்ன எல்லாத்துக்கும் ஓகேவா? வாய் திறப்பாரா விஜய்?’ தவெகவை லாக் செய்த இடும்பாவனம் கார்த்தி!’

Kathiravan V HT Tamil

Dec 15, 2024, 04:22 PM IST

google News
‘இந்தியா’ எனும் நாட்டின் கட்டமைப்பையையே ஏற்க மறுத்து, சுதந்திர நாளை, ‘கறுப்பு நாள்’ என்றவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?
‘இந்தியா’ எனும் நாட்டின் கட்டமைப்பையையே ஏற்க மறுத்து, சுதந்திர நாளை, ‘கறுப்பு நாள்’ என்றவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

‘இந்தியா’ எனும் நாட்டின் கட்டமைப்பையையே ஏற்க மறுத்து, சுதந்திர நாளை, ‘கறுப்பு நாள்’ என்றவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

பெரியாரின் கொள்கையை த.வெ.க பின்பற்றும் எனில் ‘தனித்தமிழ்நாடு’ முழக்கத்தை வைத்தார் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்? என நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

இது தொடர்பாக இடும்பாவனம் கார்த்தி பதிவிட்டு உள்ள ’எக்ஸ்’ வலைத்தள பதிவில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு விடுத்த இரங்கல் அறிக்கையில், ‘ஆன்மா சாந்தியடைய’ எனும் சொற்பதத்தை விஜய் பயன்படுத்தியது அவர் கொள்கை வழிகாட்டியாக ஏற்ற பெரியார் ஈவெராவின் கோட்பாட்டுக்கு எதிரானதெனச் சுட்டிக்காட்டினேன். ‘கடவுள் மறுப்பை ஏற்கவில்லை’ என மாநாட்டு மேடையிலேயே அறிவித்தாரே விஜய் என விடையளிக்கிறார்கள் அவரது கட்சியினர். அடிப்படையில், பெரியார் ஈவெராவுடைய கோட்பாடுகளில், கடவுள் மறுப்பைக் கைவிட்டு, அவரை ஏற்கிறோம் என்பதே கோட்பாட்டுச் சமரசம்தான்.

பெரியார் ஈவெரா கடவுள் மறுப்பை, ‘மூடநம்பிக்கை எதிர்ப்பு’ எனும் அடிப்படையில் வைக்கவில்லை. மாறாக, சனாதன எதிர்ப்பு – சாதி ஒழிப்பு எனும் அடிப்படையிலேயே முன்வைத்தார். சாதியின் மூலமாக இருப்பது சாஸ்திரங்கள்; வேத உபநிடதங்கள்; அவற்றைக் கற்பித்ததாகக் கூறப்படுவது கடவுளர்கள் என்பதாலேயே, முதன்மை எதிரியென கடவுளைக் கருதி, கடவுள் மறுப்பை முன்வைத்தார் பெரியார் ஈ.வெ.ரா. அதாவது, சாதி ஒழிப்புக்கான ஆயுதமாகவே கடவுள் மறுப்பைக் கையிலெடுத்தார்.

கடவுள் மறுப்பைக் கைவிடுவதென்றால், சாதி ஒழிப்புக்கான மாற்று வாய்ப்பையாவது முன்வைக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் சாதி ஒழிப்புக்குக் கடவுள் மறுப்பை முன்வைக்காது, பௌத்த மதத்துக்கு மாறுதலை முன்வைத்தார். “இந்துக்கள் எறும்புக்குச் சர்க்கரை இடுவார்கள். மனிதர்கள் நீரெடுக்கத் தடைவிதிப்பார்கள்”, “மகாத்மாக்கள் வந்தார்கள்; மகாத்மாகவே சென்றார்கள். தீண்டப்படாத மக்கள் மட்டும் தீண்டப்படாதே இருக்கிறார்கள்.” ”இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஒருபோதும் இந்துவாக இறக்க மாட்டேன்” என முழங்கிப் பௌத்த மதத்துக்கு இலட்சக்கணக்கான மக்களோடு சென்றார் அம்பேத்கர். சாதியக் கட்டமைப்பைக் கொண்ட இந்து மதத்திலிருந்து விடுபடவே, பௌத்த மதத்துக்கு அவர் மாறினார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆகவே, சாதி ஒழிப்பைக் கைவிட்டு, பெரியாரை ஏற்பதாகச் சொல்வதே ஒரு அடையாள அரசியல்தான்; உருவ வழிபாடுதான். அதைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. தவெகவும் செய்ய முனைகிறது.

அதுசரி! பெரியார் ஈவெராவின் ‘கடவுள் மறுப்பை’ மட்டும் கைவிட்டு, அவரது கோட்பாடுகள் எல்லாவற்றையும் ஏற்பதாகச் சொல்கிறது தவெக. மற்ற கோட்பாடுகளென்றால்,

‘தனித்தமிழ்நாடு’ முழக்கத்தை வைத்தார் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

பார்ப்பனரை கட்சியில் சேர்ப்பதைத் தடைசெய்தார் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

பார்ப்பனர் அல்லாதார் அமைச்சரவையை அமைக்கக் கூறினார் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

‘இந்து’ என்பதை ஒருபோதும் ஏற்காதவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

பகவத் கீதையைக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

ராமர், பிள்ளையார் எனும் புராணப் புரட்டுகளை ஆரியச்சூழ்ச்சி எனக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

‘இந்தியா’ எனும் நாட்டின் கட்டமைப்பையையே ஏற்க மறுத்து, சுதந்திர நாளை, ‘கறுப்பு நாள்’ என்றவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

‘மதுவிலக்கு என்பதே தூய்மைவாதம்’ எனக் கூறி, அதனைக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

தமிழர் இலக்கியங்களையும், காப்பியங்களையும் கடுமையாகச் சாடியவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

மொழி என்பதைத் தொலைத்தொடர்புக்கருவி எனக் கூறி, அது வழிபாட்டிக்குரியதல்ல; கொண்டாடத்தக்கதல்ல என்றவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

தமிழ்த்தாயையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் கடுமையாக எதிர்த்தவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

'தமிழ்ச்சனியன்', 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' எனக் கூறி, தமிழ்மொழியைக் கடுமையாகத் தூற்றியவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

“எனக்கு மொழி அபிமானம் இல்லை; தேசாபிமானம் இல்லை; நாட்டாபிமானம் இல்லை. இருக்கிற ஒரே அபிமானம் மனிதாபிமானம்” எனக் கூறி, மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும் முற்றாக எதிர்த்தவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

“தேசப்பக்தியே அயோக்கியர்களின் புகலிடம்” எனக் கூறி, தேசப்பக்தியை எதிர்த்தவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

வெள்ளையர்களின் ஆட்சியை விரும்பியவர் பெரியார் ஈவெரா. அதை ஏற்கிறாரா விஜய்?

இன்னும் பற்பல கேள்விகள் இருக்கின்றன. இதற்கு முதலில் பதில் சொல்லட்டும்! வாய்திறப்பாரா விஜய்?

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி