H Raja About Vijay: ’விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி’ அடக்கமாக ஹெச்.ராஜா சொன்ன பதில்!
Feb 03, 2024, 08:37 PM IST
“விஜய் அண்டெஸ்டட் அரசியல்வாதி, அவர் கண்டெஸ்ட் செய்யும்போது பார்த்துக் கொள்ளலாம்”
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக மீது திட்டமிட்டு காவல்துறை வழக்குகளை போட்டு வருகிறது. அகில இந்திய அளவில் பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடைக்கு எதிராக போராடிய திருமாவளவன், சீமானை காவல்துறை கைது செய்யாதது ஏன்?, காவல்துறையானது ஆளும் திமுகவின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது என கூறி உள்ளார்.
பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் அமையுமா என்பது குறித்த கேள்விக்கு, பாஜக தேசிய கட்சி, எங்களுக்கு கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.
நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சித் தொடங்கி உள்ளது குறித்த கேள்விக்கு, வாழ்த்துகள், 18 வயது நிரம்பிய யாரும் அரசியல் கட்சி தொடங்கலாம். அதனை வரவேற்கிறோம். அவரது கட்சி, கொள்கை, நிலைப்பாடுகளை எடுக்கும்போதுதான் அவரை விமர்சிக்க முடியும். இப்போது அவரை வரவேற்போம், வாழ்துவோம். விஜய் அண்டெஸ்டட் அரசியல்வாதி, அவர் கண்டெஸ்ட் செய்யும்போது பார்த்துக் கொள்ளலாம்.
என்னுடைய கணிப்பில் வரும் 50 நாட்களுக்குள் ஒரு அரை டஜன் மந்திரியாவது சிறை செல்வார்கள் என நினைக்கிறேன். இது குறித்து அவர் என்ன சொல்ல போகிறார் என்று பார்ப்போம். பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது தொடர்பான கேள்விக்கு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நான் அறிகிறேன். சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிரான திட்டம் இருப்பதாகவும் நான் அறிகிறேன். என்.ஐ.ஏவின் விசாரணை வெற்றி விகிதம் 98 சதவீகிதமாக உள்ளது. என்.ஐ.ஏ ஒரு நடவடிக்கை எடுத்ததால் இதில் முகாந்திரம் இல்லாமல் இருந்து இருக்காது.
தமிழ்நாடு அரசியலில் வளரும் ஒரே அரசியல் கட்சியாக பாஜக உள்ளது. எதிர்க்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக பாஜக வளரும்.