தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Exclusive: ’லிஸ்ட் ரெடி! 15 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்!’ திருச்சி சூர்யா சிவா நச் பேட்டி!

HT Exclusive: ’லிஸ்ட் ரெடி! 15 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்!’ திருச்சி சூர்யா சிவா நச் பேட்டி!

Kathiravan V HT Tamil

Dec 27, 2023, 08:58 PM IST

google News
”Trichy Surya Siva Interview: திமுகவில் நான் இணைய வேண்டும் என்று இன்று முடிவு செய்தால் கூட என்னால் திமுகவில் இணைய முடியும்”
”Trichy Surya Siva Interview: திமுகவில் நான் இணைய வேண்டும் என்று இன்று முடிவு செய்தால் கூட என்னால் திமுகவில் இணைய முடியும்”

”Trichy Surya Siva Interview: திமுகவில் நான் இணைய வேண்டும் என்று இன்று முடிவு செய்தால் கூட என்னால் திமுகவில் இணைய முடியும்”

பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அளித்த நேர்காணல்:-

கேள்வி: அரசியலில் இடைவெளிக்கு பிறகு உங்கள் முகம் தென்படத் தொடங்கி உள்ளதே?

திருச்சி சூர்யா சிவா: வாழ்க்கை என்பது இசிஜி போலத்தான் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கட்சியை விட்டு வெளியில் இருந்தாலும் கட்சி வேலைகளை செய்து கொண்டுதான் இருந்தோம். குடும்பத்திற்காக நேரம் ஒத்துக்கவும், என் மீது திமுக போட்ட 14 வழக்குகளை தீர்க்கவும் இந்த காலகட்டம் பயன்பட்டது.

கேள்வி: உங்கள் குரல் மீண்டும் ஊடகங்களில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி உள்ளதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?

திருச்சி சூர்யா சிவா: என்னுடைய நேர்காணகல் கட்சிக்காரர்களை தாண்டி திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஈர்க்க கூடிய விஷயமாக இருந்தது. இதை கடவுளின் அருளாக பார்க்கிறேன். தூய தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சுதான் தமிழ்நாட்டு அரசியலில் எடுபட்டு வந்தது. 

திரு டிடிவி தினகரன் அவர்கள் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எளிய மொழியில் பேசினார். நானும் மக்களுக்கு புரியும் வகையிலான தொனியில் பேசுகிறேன். மீண்டும் தேர்தல் சமயத்தில் கட்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும், கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக எனது பணியை தீவிரப்படுத்தி உள்ளேன்.

கேள்வி: திமுகவில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறதே?

திருச்சி சூர்யா சிவா: எனக்கு திமுகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை; ஆனால் திமுகவில் நான் இணைய வேண்டும் என்று இன்று முடிவு செய்தால் கூட என்னால் திமுகவில் இணைய முடியும். என்னை விட கடுமையாக திமுகவை விமர்சித்தவர்கள் கூட தற்போது திமுகவில் இணைந்து உள்ளார்கள். 

ஆனால் எனக்கு எந்த சூழலிலும் திமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் மீது திமுக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் வெளியில் வருவார்கள். வரும் தேர்தல்களில் திமுக கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

கேள்வி: பாஜக தலைவர் அண்ணாமலை உடன் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறதே?

திருச்சி சூர்யா சிவா: அவர் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அண்ணாமலை அவர்கள் எனக்கு உடன் பிறந்த சகோதரர் போல உள்ளார். என்னை எல்லா வகையிலும் காப்பாற்றி தந்தை ஸ்தானத்திலும், சகோதரனாக இருக்க கூடியவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

கேள்வி: அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

திருச்சி சூர்யா சிவா: திமுகவில் உள்ள ஊழல் பெருச்சாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் உள்ளார்கள். பல அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு செல்லவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு வீட்டிற்குதான் முதலில் ரெய்டு வரும் என்று நினைத்தேன். 

ஐ.பெரியசாமி போன்றவர்களை எல்லாம் இன்னும் விட்டு வைத்து உள்ளார்கள். எனக்கு தெரிந்த வரை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் 15 மந்திரிகளுக்கு மேல் சிறை செல்வார்கள்.

கேள்வி: ஆருத்ரா பண மோசடி வழக்கில் பாஜக தலைவர்கள் பலர் சிக்குவார்கள் என கூறப்படுகிறதே?

திருச்சி சூர்யா சிவா: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை திமுக அரசிடம்தான் உள்ளது. யார் மீது என்ன குற்றம் உள்ளதோ அதை நிருபியுங்கள். ஹரிஷ் என்ற நபர் பாஜக பொறுப்பில் இருந்தார் அவரை கைது செய்து 4 மாதம் ஆகிவிட்டது. 

ஆர்.கே.சுரேஷும் போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டார். அமர்பிரசாத் ரெட்டியின் பெயரும் இதில் அடிபடவில்லை. ஹரிஷ் என்பவர் பாஜகவில் பொறுப்பில் இருந்தார் என்ற காரணத்திற்காக பாஜகவை குற்றம்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பாஜகவின் வியூகம் என்ன?

திருச்சி சூர்யா சிவா: தமிழ்நாட்டில் எங்கள் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேலை செய்து கொண்டு இருக்கிறோம். பாஜக 3 சதவீத ஓட்டு வங்கி உள்ள கட்சி என்ற விமர்சனம் உள்ளது. ஆனால் எங்கள் வாக்கு சதவீதத்தை 15 சதவீதமாக ஆக உயர்த்துவோம். எங்கள் வாக்கு வங்கி உயர்ந்தால் இயல்பாகவே எங்களால் எம்.பி சீட்டுகளை வெல்ல முடியும். குறைந்த பட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 எம்.பிக்கள் வரை வெல்ல நாங்கள் முனைப்பாக இருக்கிறோம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி