link aadhar with EB connection: மின் இணைப்பை ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
Nov 26, 2022, 08:59 PM IST
தமிழகத்தில் மின்கட்டணத்தை செலுத்துவதற்கு ஆதார் எண்ணை இணைக்கவேண்டும். எப்படி என்பதை இங்கு காணலாம்.
தமிழகத்தில் மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு மின் இணைப்பையும் உங்களது ஆதார் எண்ணையும் லிங்க் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலில் உங்கள் மின்கட்டணம் செலுத்தும் அட்டையையும், ஆதார் கார்டையும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய ஆதார் கார்டை இணையதளத்தில் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் ஆதார் கார்டு போட்டோ 300kbக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு மின்வாரியத்தின் TANGEDCO Online Paymentக்கான
https://www.tnebnet.org › awp › login
https://www.tangedco.gov.in
ஆகிய இரு வெப்சைட்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி இந்த இணைப்பைச் செய்ய வேண்டும்.
முதலில் உங்கள் மின் இணைப்பு எண்ணையும், மொபைல் எண்ணையும் இதில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து நீங்கள் ரெஜிஸ்டர் செய்த செல்போன் எண்ணுக்கு ஒரு OTP எண் வரும். அதையும் இந்த வெப்சைட்டில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
அடுத்த பேஜில் உங்கள் வீட்டு உரிமையாளரின் விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதில் நீங்கள் இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரருடையதா என்று கேட்கப்பட்டிருக்கும்.
இதற்கு நீங்கள் சரியான பதிலை நிரப்பிவிட்டு ஆதார் எண்ணை இடைவெளி விடாமல் பதிவுசெய்ய வேண்டும். அதேபோல் ஆதார் எண்ணில் பெயர் எப்படி இருக்கிறதோ அதேபோன்று நிரப்ப வேண்டும்.
பின்னர் நீங்கள் வைத்திருக்கும் 300 கேபி சைஸ் படத்தை அப்லோடு செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு நீங்கள் அளித்த விவரங்கள் உங்களுடையதுதான், உண்மையானதுதான் என்று சான்றழித்து சப்மிட் செய்ய வேண்டும். இவ்வாறு சப்மிட் செய்யப்பட்டவுடன், விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற தகவல் வரும்.
இத்துடன் உங்கள் ஆதார் இணைப்புப்பணி முடிந்தது.
வாடகை வீட்டில் குடியிருப்பவரும் தங்கள் மின் இணைப்பை லிங்க் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி உங்கள் ஆதார் அட்டையும் மின் இணைப்பும் இணைக்கப்பட்டுவிட்டால் உங்களது வீட்டு உரிமையாளருக்கு நீங்கள்தான் அவரது வீட்டில் இருக்கிறீர்கள் என்பதற்கான கன்பர்மேஷன் மெசேஜ் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.