தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Research : வீடுகட்ட டயப்பர் வேஸ்ட்! கிரானைட்க்கு மாற்று உண்டு! ஆய்வு தரும் சுவாரஸ்ய தகவல்!

Research : வீடுகட்ட டயப்பர் வேஸ்ட்! கிரானைட்க்கு மாற்று உண்டு! ஆய்வு தரும் சுவாரஸ்ய தகவல்!

Priyadarshini R HT Tamil

May 15, 2023, 07:01 AM IST

google News
Research : வீடுகள் கட்ட பயன்படுத்தி டயப்பர் வேஸ்ட்களை அரைத்து மணலுடன் கலந்துகொள்ளலாம் என்றும், கிரானைட்டுக்கு பதில் குவார்ட்ஸை பயன்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
Research : வீடுகள் கட்ட பயன்படுத்தி டயப்பர் வேஸ்ட்களை அரைத்து மணலுடன் கலந்துகொள்ளலாம் என்றும், கிரானைட்டுக்கு பதில் குவார்ட்ஸை பயன்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Research : வீடுகள் கட்ட பயன்படுத்தி டயப்பர் வேஸ்ட்களை அரைத்து மணலுடன் கலந்துகொள்ளலாம் என்றும், கிரானைட்டுக்கு பதில் குவார்ட்ஸை பயன்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழகத்தில், கிருஷ்ணகிரியல் 2011-21 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சட்ட ரீதியாக உரிய அனுமதியின்றி 172 கிரானைட் குவாரிகள் செயல்பட்டுள்ளன என்றும், 2019-22 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்த்தில் காவல் துறையினர் சட்ட விரோத கிரானைட் நிறுவனங்கள் மீது 667 வழக்குகள் பதிவுசெய்துள்ளனர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

சட்ட விரோதமாக இயங்கிய கிரானைட் நிறுவனங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 321.81 காடி ரூபாய் அபராதம் விதித்தும், அரசு அதிகாரிகள் அதில் 0.62 சதவீதம் (20 லட்சம் மட்டுமே) வசூலித்துள்ளனர்.

எஞ்சிய பணத்தை வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்காததுடன், அரசுக்கு சொந்தமான கைப்பற்றப்பட்ட கிரானைட் மற்றும் நீலமெட்டல் கற்களை தனியார் நிறுவனங்கள் எடுத்துச்சென்று விற்கப்பட்ட தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளன. இவை அனைத்தும் சட்ட விரோதமான செயல்கள். அனைத்திலும் அரசு அதிகாரிகள் துணை போயுள்ளனர். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளது, சமூக ஆர்வலர்களையும், சுற்றுச்சூழலியலாளர்களையும் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதில் எந்த பாகுபாடுமின்றி அனைத்து அரசுகளின் அதிகாரிகளும் சட்டவிரோத இந்த செயல்பாட்டிற்கு துணை என்பதுதான் இதில் கூடுதல் ஹைலைட்.

கிரானைட் கற்களின் உற்பத்தி செலவு பிடிக்கும் விஷயமாக இருந்தாலும், அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அது புதுபிக்க முடியாத ஆற்றல் சக்தி வகையை (Non-renewable Energy) சேர்ந்தது.

மேலும் இதனால் புவிவெப்பமடைதல், சீர்செய்ய முடியாத நீர், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதையும் அரசு கணக்கில் கொள்ளவேண்டும்.

ஒற்றை அடுக்கு வீடுகளில் மணலுக்கு பதிலாக பயன்படுத்திய தூக்கி எரியக்கூடிய டயப்பர் வேஸ்டுகளை 8 சதவீதம் வரை கான்கிரீட் கலவையில் நாம் பயன்படுத்தும்போது வீடுகளின் உறுதித்தன்மையில் பாதிப்பில்லாமல் இருப்பது ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கிரானைட்டுக்கு பதில் குவார்ட்ஸை பயன்படுத்துவது மாற்றாகவும், விலை குறைந்ததாகவும் இருக்கும்.

அரசே சட்டவிரோத செயல்பாட்டிற்கு, கிரானைட் விஷயத்தில் துணைபோவதால், அதை சரிசெய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை