தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Masu: ’உங்கள நாய் கடிச்சா இங்க வாங்க’ எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் காட்டமான பதில்!

EPS Vs MaSu: ’உங்கள நாய் கடிச்சா இங்க வாங்க’ எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் காட்டமான பதில்!

Kathiravan V HT Tamil

Aug 15, 2023, 03:43 PM IST

google News
”எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களோடு இருப்பவர்கள் எல்லாம் இந்த 4 மணி முதல் 6 மணி வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்”
”எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களோடு இருப்பவர்கள் எல்லாம் இந்த 4 மணி முதல் 6 மணி வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்”

”எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களோடு இருப்பவர்கள் எல்லாம் இந்த 4 மணி முதல் 6 மணி வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்”

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்திருந்த அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை உள்ளது ஆனால், சுகாதாரத் துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த விடியா திமுக அரசின் சுகாதாரத் துறை மந்திரி மக்கள் நலன் காக்கும் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என்பதே சந்தேகமாக உள்ளது. துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தார்.

மா.சுப்ப்பிரமணியன் பதில் 

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், மா.சுப்பிரணியன் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வருகிறார் என ஈபிஎஸ் சொல்லி உள்ளார். முதலில் உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி; அதில் தவறு ஏதும் இல்லை. என்னை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து 6 மணிக்கு என்னுடைய உடற்பயிற்சியை முடிப்பேன்.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் 8 கி.மீ நீளத்திற்கான நடைபாதையை அமைத்துக் கொண்டு இருக்கிறோம்.நாம் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் 8 கி.மீ நடைபாதையை உருவாக்குவோம் என்று சொல்லி உள்ளோம். நான் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் அதிகாலையில் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உடன் சென்று அந்த நடைபாதையை பார்வையிட்டு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறேன்.

எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களோடு இருப்பவர்கள் எல்லாம் இந்த 4 மணி முதல் 6 மணி வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். 4 மணிக்கு நான் எழுந்து நடப்பது அவருக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவருக்கு வயிறெரிச்சலை தருகிறது.

நாய் கடிக்கு மருந்தில்லை என்று ஈபிஎஸ் சொல்லி உள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு நாய் கடித்தால் 2786 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் உள்ளது. பாம்புகடி மற்றும் நாய் கடிக்கான மருந்துகள் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே உள்ளது. அப்படி உங்களுக்கு எங்கேயாவது நாய் கடித்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடப்பாடி பழனிசாமி மருந்தை போட்டுக் கொள்ளலாம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை