தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சுதந்திரதினத்தில் 50 பேரர், பூட்டிகளுடன் 90வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

சுதந்திரதினத்தில் 50 பேரர், பூட்டிகளுடன் 90வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

I Jayachandran HT Tamil

Aug 16, 2022, 08:18 PM IST

ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தனது 90ஆவது பிறந்தநாளை 50 பேரன், பேத்தியர், பூட்டியருடன் சிறப்பாக கொண்டாடிய மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தனது 90ஆவது பிறந்தநாளை 50 பேரன், பேத்தியர், பூட்டியருடன் சிறப்பாக கொண்டாடிய மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தனது 90ஆவது பிறந்தநாளை 50 பேரன், பேத்தியர், பூட்டியருடன் சிறப்பாக கொண்டாடிய மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பகநதி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து (60) - நகோமி (90) தம்பதியினர் விவசாய பணியில் ஈடுபட்டுவந்தனர். இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்கள் என 8 பிள்ளைகளுடன் வசித்து வந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்

Weather Update: கனமழை எச்சரிக்கை.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

Ramadoss: “மக்களுக்கு சேவை வழங்குவதில் தமிழக அரசு நிர்வாகம் படுதோல்வி”..விளாசும் ராமதாஸ்!

Weather Update: ‘குளிருதடி மாலா ஹீட்டரை போடு’.. இன்று, நாளை இங்கெல்லாம் மழை பெய்யும் மக்களே! - முழு லிஸ்ட் உள்ளே!

இந்நிலையில் நாகமுத்து கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இயற்கை எய்திய நிலையில் தாய் நகோமி தமது வயலில் விவசாயம் செய்து 8பிள்ளைகளையும் வளர்த்து படிக்க வைத்து பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளார். தற்போது நகோமியின் பிள்ளைகள் ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன வேலை என அனைவரும் நல்ல பணிகளில் உள்ளனர்.

நகோமிக்கு 22 பேரன், பேத்திகள் மற்றும் பூட்டன், பூட்டி என 50க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வருகிறார்.

இளம் வயதில் இருந்தே தனது பிள்ளைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக வேளாண் பணிகளில் ஈடுபட்டுவந்த நகோமி கிராமத்தில் வீட்டில் கஞ்சி போன்ற எளிமையான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார்.

இதனிடையே தனது தாயார் நகோமியின் பிறந்தநாள் சுதந்திர தினத்தன்று வருப்பதால் நாட்டின் 75ஆவது சுதந்திர தின ஆண்டு விழா மற்றும் நகோமியின் 90வது பிறந்தநாளை அவரது பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், பூட்டன், பூட்டிகள் என அனைவரும் ஒன்றிணைந்து மதுரையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் கொண்டாடினர்.

40க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்ட மூதாட்டி நகோமியின் 90ஆவது பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி, பிறந்தநாள் வாழ்த்து பாடல்களை பாடி உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக மூதாட்டி நகோமி நீண்ட ஆயுளோடு வாழவேண்டி சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நகோமியின் பிள்ளைகள், மருமகள், மருமகன்கள், பேரக்குழுந்தைகள் மூதாட்டி நகோமியின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். மேலும் மூதாட்டி குறித்து கவிதைகளையும், பாடல்களை பாடினர்.

மூதாட்டி நகோமி வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மரியாதை செலுத்துவதையும், மருமகள் - மாமியர் இடையே எந்தவித கருத்து வேறுபாடின்றி வாழ்ந்து வருவதையும் எடுத்துரைத்தனர்.

தனது 90வயது பிறந்தநாள் விழாவை பேரக்குழுந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களோடு கூடி கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணத்தை நினைத்து மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.

மூதாட்டி நகோமியின் 90ஆவது பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் வகையில் 90 மரக்கன்றுகளை நட்டுவைத்தும், 90 ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.

தனது 90ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியது மகிழ்ச்சி என மூதாட்டி தெரிவித்தார். தங்களது மாமியார் தாயை போல இருந்துவருவதாகவும், தனது வாழ்நாளில் ஒருநாள் கூட மருமகள் - மாமியார் உறவில் எவ்வித கருத்துவேறுபாடின்றி இருந்ததாக மருமகள்கள் தெரிவித்தனர். அவர் தங்களது பாசத்தின் அடையாளம் எனவும், மதிப்பு மரியாதை வயது வேறுபாடின்றி கொடுப்பவர் எனவும் பேத்திகள் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி