தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul : வத்தலகுண்டு அருகே உறுப்பு தானம் செய்த பூ விவசாயிக்கு அரசு மரியாதை!

Dindigul : வத்தலகுண்டு அருகே உறுப்பு தானம் செய்த பூ விவசாயிக்கு அரசு மரியாதை!

Divya Sekar HT Tamil

Nov 05, 2023, 12:58 PM IST

google News
வத்தலகுண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
வத்தலகுண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

வத்தலகுண்டு அருகே விபத்தில் மூளை சாவு அடைந்து உறுப்பு தானம் செய்த பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குன்னுத்துபட்டியை சேர்ந்த பூ விவசாயி வேலுச்சாமி நேற்று முன்தினம் இரு சக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலுச்சாமி மூளை சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன் வந்தனர். இதனை அடுத்து வேலுச்சாமியின் உடல் உறுப்புகள் சிகிச்சையில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.

உறுப்பு தானம் செய்த வேலுச்சாமியின் உடல் குன்னுத்து பட்டி மயானத்துக்கு கொண்டுவரப்பட்டது.தமிழக அரசு அறிவித்தபடி அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வட்டாட்சியர் தனுஷ்கோடி, டி எஸ் பி முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை வழங்கி அஞ்சலி செலுத்தினர்

பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த வேலுச்சாமியின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆறுதல் தெரிவித்து நன்றி கூறினார்

தமிழகத்தில் முதல்முறையாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி