தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Youth Conference: ’உரிமையை தொலைத்தவர்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்துவதா?’ விளாசும் தமிழிசை! பதிலடியில் திமுக!

DMK Youth Conference: ’உரிமையை தொலைத்தவர்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்துவதா?’ விளாசும் தமிழிசை! பதிலடியில் திமுக!

Kathiravan V HT Tamil

Jan 21, 2024, 08:07 AM IST

google News
’DMK Youth Conference: இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர் என தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்’
’DMK Youth Conference: இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர் என தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்’

’DMK Youth Conference: இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர் என தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்’

“தி.மு.க.இளை­ஞர் அணி­யின் 2வது மாநில மாநாடு” மாநில உரிமை மீட்பு முழக்க மாநா­டாக, இன்று (21-01-2024) சேலம் – பெத்­த­நா­யக்­கன் பாளை­யத்­தில் நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு திமுக கொடியினை கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி.ஏற்றி வைக்க மாநாடு தொடங்குகிறது.

காலை 9.30 மணி­ய­ள­வில், திமுக இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர் எஸ்.ஜோயல் வரவேற்புரையாற்றுகிறார். 

காலை 9.45 மணி­ய­ள­வில் மாநாட்­டின் தலை­வ­ராக, இளை­ஞர் அணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலினை முன்­மொ­ழி­த­லும் வழி­மொ­ழி­த­லும் நடை­பெ­று­கி­றது.

காலை 11.00 மணிக்­குத் தொடங்கி, மாலை 6.00 மணி­வரை, பல்­வேறு தலைப்­பு­க­ளில் ‘சொற்­பொ­ழி­வ­ரங்­கம்’’ நடை­பெ­று­கி­றது.

திருச்சி என்.சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு, அமைச்­சர் அன்­பில் மகேஸ்பொய்­யா­மொழி, கம்­பம் செல்­வேந்­தி­ரன், முனை­வர் சபா­பதி மோகன், திண்­டுக்­கல் ஐ.லியோனி, பேரா­சி­ரி­யர் சுப.வீர­பாண்­டி­யன், வழக்­க­றி­ஞர் அருள்­மொழி, அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்­சர் மதி­வேந்­தன், கரு பழ­னி­யப்­பன், எம்.எம்.அப்­துல்லா எம்.பி.,மருத்­து­வர் எழி­லன் நாக­நா­தன் எம்.எல்.ஏ., மனுஷ்­ய­புத்­தி­ரன், தமி­ழன் பிர­சன்னா, வே.மதி­மா­றன், கோவி லெனின், வழக்­க­றி­ஞர் ராஜீவ் காந்தி, வழக்­க­றி­ஞர் செ.ம.மதி­வ­தனி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

மாலை 6.00 மணி­ய­ள­வில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாலை 6.30 மணி­க்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் உரையாற்றும் நிலையில் இறுதியாக இரவு 7.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டை விமர்சித்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் செய்துள்ளார். அதில்,

இளைஞரணி மாநாடாம் ....

பிரம்மாண்ட முன்னேற்பாடாம்....

முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்...

தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு....

அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் மக்களைக் காக்க

முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா?

என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்....

இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர்....

இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே

ஏன்? என்று கேட்கிறது அதே குரல்....

இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால்?

ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்....

ஆனால் ஜனநாயகத்தில்

ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல்...

உரிமை மீட்பு மாநாடாம்?

காவிரி உரிமையை தொலைத்தது யார்?

கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?

ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்?

கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்?

நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்?

உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்..

வாரிசுகளுக்கே அரியணையா?

இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?

(தி)க்கு (மு)க்காடும் (க)ண்மணிகள்.... என குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சவுந்தராஜனின் இந்த ட்விட்டர் பதிவுக்கு திமுக வழக்கறிஞரான சரவணன் அண்ணாதுரை பதில் அளித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ‘எக்ஸ்’ சமூகவலைத்தள பதிவில், முந்தைய நாள் மழைக்கான அறிவிப்பு வந்ததாம், சரிதான்.

ஒரு நான்கு நாட்களுக்கு முன்னால் கொடுக்க வேண்டிய எச்சரிக்கை. கொடுக்கத்தவறியது ஒன்றிய அரசு. கேட்பீர்களா?

இந்த கீச்சு எதற்காக? தலைவர் பதவிக்காகவா அல்லது எம்பி சீட்டுக்காகவா? என கேள்வி எழுப்பி உள்ளார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை