ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி
Aug 15, 2022, 01:46 PM IST
நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
சென்னை : நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். செங்கோட்டையில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார்.
பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதேபோல் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்நிலையில், நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மத்திய படையினர் மற்றும் அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கினார்.
டாபிக்ஸ்