தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Reopens: சீருடை, புத்தகப்பைகளை தயாராக்குங்கள் மாணவர்களே! திட்டமிட்டபடி அரசு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

School Reopens: சீருடை, புத்தகப்பைகளை தயாராக்குங்கள் மாணவர்களே! திட்டமிட்டபடி அரசு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

Priyadarshini R HT Tamil

May 23, 2023, 10:38 AM IST

School Reopens : தமிழ்நாடு முழுவதும்‌ ஜூன்‌ 1ம்‌ தேதி 6ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு பள்ளிகள்‌ திட்டமிட்டபடி திறக்கப்படும்‌. தொடர்ந்து 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு ஜூன்‌ 5ம் தேதி பள்ளிகள்‌ திறக்கப்படும்

தமிழக பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகளும், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளும் ஆண்டு இறுதியில் நடத்தப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

அந்த வகையில் கடந்த கல்வியாண்டிற்கான அனைத்து தேர்வுகளும் நடந்த முடிவடைந்து 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் கோடை விடுமுறைக்காக ஏப்ரல் மாத இறுதியில் மூடப்பட்டனர். கொரோனாவுக்குப்பின் மாணவர்கள் ஒரு முழு ஆண்டை கடந்த கல்வியாண்டில்தான் நிறைவு செய்துள்ளனர். அதற்கு முன்னர் முழு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாதி ஆன்லைன் மற்றும் மீதி நேரடி என இந்த கல்வியாண்டுக்கு முந்தைய இரு கல்வியாண்டுகளும் கழிந்தன.

இந்நிலையில் இந்தக்கல்வியாண்டு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் தற்போது விடுமுறையில் இருந்துவருகிறார்கள். விடுமுறையையொட்டியும், வழக்கமான சித்திரை திருவிழாக்களையொட்டியும், அவர்கள் பல்வேறு ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாதலங்களுக்கும் என சுற்றி தங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்களுக்கு முக்கியமான தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதாவது பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். நன்றாக விடுமுறையை கழித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு, இது நிச்சயம் கஷ்டமான செய்திதான். ஆனாலும் முக்கியமாக செய்தி.

அரசுப்பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன்‌ 1ம்‌ தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ள நிலையில்‌ பள்ளிகள்‌ திறப்பது தாமதமாகும் என தகவல்கள்‌ வெளியானது.

இதுகுறித்து செய்தியாளர்கள்‌ எழுப்பிய கேள்விக்கு பதில்‌ அளித்த அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஜூன்‌ 1ம்‌ தேதி 6ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு பள்ளிகள்‌ திட்டமிட்டபடி திறக்கப்படும்‌. தொடர்ந்து 1ம்‌ வகுப்பு முதல்‌ 5ம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு ஜூன்‌ 5ம் தேதி பள்ளிகள்‌ திறக்கப்படும்‌ என தெரிவித்தார்.

எனவே மாணவர்களே பள்ளிக்கு தேவையாக சீருடை, புத்தகப்பை ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். எஞ்சிய விடுமுறை நாட்களில் அதை தயார்படுத்தி பள்ளி செல்ல விரையுங்கள்.

டாபிக்ஸ்