தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vp Singh's Statue: சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை திறந்து முதல்வர் செய்த சம்பவம்! ஆச்சர்யப்பட்ட அகிலேஷ்!

VP Singh's statue: சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலையை திறந்து முதல்வர் செய்த சம்பவம்! ஆச்சர்யப்பட்ட அகிலேஷ்!

Kathiravan V HT Tamil

Nov 27, 2023, 01:23 PM IST

google News
“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்”
“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்”

“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்”

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் அவர்களின் மனைவி சீதாகுமாரி, அவரது மகன் அஜய் சிங் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். 

அப்போது, “உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரசாத் சிங் என்பவருக்கு மகனாக பிறந்தவர்தான் விஷ்வநாத் பிரதாப் சிங். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும் அதில் மனம் ஓட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் இணைந்து தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.

மண்டல் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்தப்போவதாக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது முற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரால்‘இதனை செய்ய முடியாது’ என்று அமைச்சர் ஒருவரே சொன்னபோது, ‘இதோ இப்போதே தேதியை சொல்கிறேன்‘ என்ற கம்பீரத்துக்கு சொந்தக்காரர் வி.பி.சிங் அவர்கள். அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். 

வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது “வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன் என தெரிவித்தார். 

வி.பி. சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு என்றும் வி.பி.சிங் வாழ்வு மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். 11 மாதமே பிரதமராக இருந்தாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானது. வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல, ஏழையும் இல்ல. ஆனாலும் பிற்படுத்தப்பட்ட ஏழை சமூகத்திற்காக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி காண்பித்தார்  என்றும் முதலமைச்சர் கூறினார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி