தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sellur Raju: ’தங்கம் தென்னரசு மிகச்சிறந்த நிர்வாகி; எங்கள் சாதிக்காரர் என்பதால் அவரை புகழவில்லை’ - செல்லூர் ராஜூ

Sellur Raju: ’தங்கம் தென்னரசு மிகச்சிறந்த நிர்வாகி; எங்கள் சாதிக்காரர் என்பதால் அவரை புகழவில்லை’ - செல்லூர் ராஜூ

Kathiravan V HT Tamil

May 12, 2023, 04:16 PM IST

google News
”5 படம் நடித்த விஷால் கூட அடுத்த முதல்வர் என்றார் ஆனால் விஜய் எத்தனையோ படம் ஹிட் கொடுத்து இளைஞர்களை ஈர்த்துள்ளார்”
”5 படம் நடித்த விஷால் கூட அடுத்த முதல்வர் என்றார் ஆனால் விஜய் எத்தனையோ படம் ஹிட் கொடுத்து இளைஞர்களை ஈர்த்துள்ளார்”

”5 படம் நடித்த விஷால் கூட அடுத்த முதல்வர் என்றார் ஆனால் விஜய் எத்தனையோ படம் ஹிட் கொடுத்து இளைஞர்களை ஈர்த்துள்ளார்”

மதுரையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைச்சரவை மாறியதற்கு முழுக்க முழுக்க 30,000 கோடிதான் காரணம், தவளை தனது வாயால் கெடும் என்பார்கள். இவர் உண்மையை சொல்லி ’மதுரைக்காரன் மாட்டிக்கிடான்; மாடு பிடிப்பட்டது’. 

இப்போது அவரை நீக்கினால் உண்மையாகிவிடும் என்ற அடிப்படையில்தான் சாதாரண இலாகாவை கொடுத்துள்ளார்கள். கோபக்கனல் பழனிவேல் தியாகராஜன் மீது முதல்வருக்கும் அவரது குடும்பத்திற்கும் குறிப்பாக உதயநிதிக்கும் சபரீசனுக்கும் உள்ளது என்பது வெளிப்படையான உண்மை என்று தெரிவித்தார்.

புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, என்னை பொறுத்தவரை அமைச்சர் தென்னரசு அவர்கள் மிகச்சிறந்த நிர்வாகி, மிகச்சிறந்த ஆற்றலாளர்; அதில் மாற்றுக்கருத்து இல்லை. எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் நான் இதை சொல்லவில்லை. 

உண்மையிலேயே அவருக்கு எந்த துறையை கொடுத்தாலும் அதில் முத்திரையை பதிக்க கூடியவர். இன்றைக்கு உள்ள அமைச்சர்களில் யாரையும் குற்றம்சொல்லி, குறைசொல்லி, தரக்குறைவாக பேசாமல் யாரையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் செயல்படுபவர். அவரிடம் நிதித்துறை சென்றிருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

ஓபிஎஸ்-டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அரைச்ச மாவையே அரச்சிட்டு; வேற ஏதாச்சி கேள்விக்கேளுங்க...” என கூறினார். மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் உட்பட எல்லா கட்சியும் எங்கள் நண்பன்; எங்களின் ஒரே எதிரி திமுக என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

விஜய் மக்கள் இயக்கம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர் இளைஞர்; அவர் குறித்த அரசியலுக்கு வந்த பிறகுதான் சொல்ல முடியும். 4 அல்லது 5 படம் நடித்த விஷால் கூட அடுத்த முதல்வர் என்றார் ஆனால் விஜய் எத்தனையோ படம் ஹிட் கொடுத்து இளைஞர்களை ஈர்த்துள்ளார் என செல்லூர் ராஜூ பதில் அளித்தார்.

அடுத்த செய்தி