OPS About NDA: ’பாஜக மத்திய தலைமையோடு ஒரு மாதமாக பேசி வருகிறோம்’ போடு உடைத்த ஓபிஎஸ்!
Sep 28, 2023, 07:58 PM IST
”பிரதமரின் அருகில் அமர்ந்து கொண்டு கூட்டணி அறிவித்தவர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்”
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான பண்ரூட்டி ராமச்சந்திரன், வைத்திங்கம், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி:- பாஜக உடன் கூட்டணியில் உள்ளீர்களா இல்லையா?
அதை நீங்கள் பாஜகவிடம் கேட்க வேண்டும்.
கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு யாருக்கு?
அது குறித்து தேர்தல் வரும்போது தீர்மானிப்போம். பாஜக என்ன செய்யப்போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.
கேள்வி:- பாஜக தரப்பில் இருந்து யாராவது பேசினார்களா?
கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
கேள்வி:- டெல்லிக்கு சென்று ஜே.பி.நட்டா, அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா?
படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும். நடைபெறுவது நாடாளுமன்றத் தேர்தல். பாஜக இரண்டு முறை ஆண்டு இருக்கிறது. மூன்றாவது முறை ஆளும் தகுதியையும் அது பெற்றுள்ளது. ஆகவே அதன் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே அதை சொல்ல முடியும்.
கேள்வி:- அதிமுக - பாஜக பிளவு நாடகம் என்று கூறப்படுகிறதே?
நீங்களே அதை நாடகம் என்று சொல்கிறீர்கள். ஒரு நாட்டை ஆளும் தேசியக் கட்சியானது தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமரின் அருகில் அமர வைத்துக் கொண்டு அறிவித்துள்ளார்கள். அப்படி அறிவித்த பாஜக தலைமையை தொடர் நம்பிக்கை துரோகம் யார் செய்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இணக்கமான சூழலில் கூட்டணிக்கட்சியிடம் பேச வேண்டும் என ஓபிஎஸ் கூறினார்.