தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jayakumar: ’நேற்று முளைத்த காளான் உதயநிதிக்கு வாய்த்துடுக்கு அதிகம்!’ ஜெயக்குமார் காட்டம்!

Jayakumar: ’நேற்று முளைத்த காளான் உதயநிதிக்கு வாய்த்துடுக்கு அதிகம்!’ ஜெயக்குமார் காட்டம்!

Kathiravan V HT Tamil

Dec 24, 2023, 03:49 PM IST

google News
”நிர்மலா சீதாராமன் குறித்து ஒரு கருத்தை சொல்லிவிட்டு வாயை கொடுத்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார்”
”நிர்மலா சீதாராமன் குறித்து ஒரு கருத்தை சொல்லிவிட்டு வாயை கொடுத்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார்”

”நிர்மலா சீதாராமன் குறித்து ஒரு கருத்தை சொல்லிவிட்டு வாயை கொடுத்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார்”

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் இருந்து பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 4இல் இருந்து 8ஆக உயர்ந்து.

ஏழை எளிய மக்கள் வீடுகளில் ஒன் லைன் சர்வீஸ் மூலம் மின்சார இணைப்பை வழங்கினார். ஐநா சபை பாராட்டும் வகையில் சத்துணவுத்திட்டத்தை கொண்டு வந்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

எம்ஜிஆர் அவர்கள்தான் முதன் முதலில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்கள். ஆனால் திமுக தாங்கள் கொண்டு வந்ததுபோல் பொய் தம்பட்டத்தை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என கூறினார். 

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை என நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளாரே என்பது குறித்த கேள்விக்கு, மழை வெள்ளம் தொடர்பான பிரச்னைக்கு வெள்ளை அறிக்கை தர வேண்டும். ஏன் அதை தர இந்த விடியா அரசு பயப்படுகிறது. உண்மையை மூடி மறைத்து பணத்தை முழுமையாக செலவு செய்யாமல் பாதிப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் வாய்க்கால்கள் குளங்களை தூர்வாரி முறையாக செப்பனிட்டு இருந்தால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்காது. இதற்கு திமுக அரசுதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் சொன்ன கருத்தைத்தான் நிர்மலா சீதாராமன் சொல்லி உள்ளார்கள்.

அரசியலில் நேற்று முளைத்த காளான் ஆன உதயநிதிக்கு வாய்த்துடுக்கு அதிகம். பொறுப்பாக கருத்துகளை சொல்லும் பக்குவம் இல்லாத அரசியல்வாதிகளாக உதயநிதி உள்ளார். நிர்மலா சீதாராமன் குறித்து ஒரு கருத்தை சொல்லிவிட்டு வாயை கொடுத்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார். நிர்மலா சீதாராமன் சொல்வதற்கு முன்பே அதிமுகவின் கருத்தை நாங்கள் சொல்லிவிட்டோம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி