தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kovai Students: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி..சுற்றுலா வந்தபோது சோகம்!

Kovai Students: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி..சுற்றுலா வந்தபோது சோகம்!

Karthikeyan S HT Tamil

Oct 20, 2023, 08:15 PM IST

google News
வால்பாறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுற்றுலா வந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வால்பாறை அருகே உள்ள சுங்கம் என்ற பகுதியில் சோலையார் ஆற்றில் குளிக்கும் போது, தண்ணீரில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பத்து பேர் இன்று (அக்.20) காலை இருசக்கர வாகனங்களில் வால்பாறை பகுதியைச் சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் சுங்கம் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அதில், 5 பேர் ஆற்றுக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

உடன் சென்ற மாணவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல் நிலைய போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கல்லூரி மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 4 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மாணவரின் உடலை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட நான்கு சடலங்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை