தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai : ஷாக்.. சென்னை புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை.. காரணம் என்ன?

Chennai : ஷாக்.. சென்னை புழல் சிறையில் பெண் கைதி தற்கொலை.. காரணம் என்ன?

Divya Sekar HT Tamil

Oct 22, 2023, 11:02 AM IST

google News
சென்னை புழல் சிறையில் பெண் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் சிறையில் பெண் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் சிறையில் பெண் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி ஜீயபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வழக்கில் மீனாட்சி என்ற காந்தி மதி கைது செய்யப்பட்டார். 

நகை திருட்டு வழக்கில் கைதான மீனாட்சி என்ற காந்திமதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

இருப்பினும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர முன் வராதாதால் அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காந்திமதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

பெண் கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக புழல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறை காவலர்கள் காந்தி மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை புழல் சிறையில் பெண் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி