தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bribe: டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறிப்பு.. வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

Bribe: டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறிப்பு.. வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்!

Karthikeyan S HT Tamil

Jul 11, 2023, 03:09 PM IST

google News
மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை மிரட்டி ரூ.12 லட்சம் பணம் பறித்ததாக எழுந்த புகார் தொடர்பாக கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகிதா அன்ன கிறிஸ்டி. சில வாரங்களுக்கு முன்பு தான் இங்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். இவரிடம் மறைமலை நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 17 வயது மகளை ரஞ்சித்(27), என்பவர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய பெண் ஆய்வாளர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது, மறைமலை நகரில் இரண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு தான் கருவுற்ற போது மாத்திரைகள் வாங்கி கருகலைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் மகிதா கிறிஸ்டி தனியார் மருத்துவமனை மருத்துவர் உமா மகேஸ்வரி என்பவரையும், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பராசக்தி என்பவரையும் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, 17 வயது சிறுமிக்கு கருகலைப்பு செய்ததைக் கூறியும், அதனை காவல் துறையில் சொல்லாமல் மறைத்ததாகவும், கருக்கலைப்பு மாத்திரை வழங்கி குற்றங்களை சுட்டிக்காட்டி பணம் கேட்டு மிரட்டிள்ளார். 

அதன்படி, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக தனியார் மருத்துவரிடம் இருந்து 2 லட்ச ரூபாயும், அரசு மருத்துவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாயும் வழக்கறிஞர் மூலமாக மகிதா அன்ன கிறிஸ்டிக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மற்றும் வழக்கறிஞரை வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளார் தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ். விசாரணையில் ரூ. 12 லஞ்சம் பணம் பெற்றது உண்மையென தெரியவந்ததன் பேரில் ஆய்வாளர் மகிதா கிறிஸ்டியை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை