தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Temple : பொய்யான தகவல்.. நம்பி ஏமாற வேண்டாம்.. பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை!

Palani Temple : பொய்யான தகவல்.. நம்பி ஏமாற வேண்டாம்.. பழனி கோயில் நிர்வாகம் எச்சரிக்கை!

Divya Sekar HT Tamil

Aug 05, 2023, 07:03 PM IST

google News
அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்வதற்கு தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், “ 0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரிவித்து பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்பட்டு வருவது இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது.

அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல் துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள்/ பொது மக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி