Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று வைரலாகும் புகைப்படம் உண்மையா? - விபரம் இதோ..!
Jun 24, 2024, 01:43 PM IST
Fact Check: தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்று சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முதல் பெண் விமானி காவ்யா மாதவன் என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியும் சமூகவலைத்தளங்களில் பெண் விமானி ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
வைரல் பதிவு
வைரல் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2016 ஆம் ஆண்டு Yuva Desam என்ற பேஸ்புக் பக்கத்தில், " இவர் கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த காயத்ரி சுப்ரான். இந்திய விமான வரலாற்றின் முதல் பெண் தலித் விமானி." என்று குறிப்பிடப்பட்டிருந்ததது.
முதல் தலித் பெண் விமானி?
தொடர்ந்து, முதல் தலித் பெண் விமானி குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Times of India மற்றும் Bangalore Mirror, "21 ஆண்டுகளுக்கு பிறகு வணிக விமானி உரிமம் பெற்ற மதுரையைச் சேர்ந்த பெண்." என்று 2018 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தன. அதன்படி, தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓட்டுனரான ரவிக்குமார் என்பவரது மகள் காவ்யா (22) வணிக விமானி உரிமம் பெற்ற பின்னர் தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், காவ்யா கூறுகையில், "2014-ல் பெங்களூரில் உள்ள அரசு விமான பயிற்சி பள்ளியில் தியரி வகுப்புக்கு பிறகு மொத்தம் 35 மணி நேர நடைமுறை வகுப்புகளுக்கு மட்டுமே நிதி இருந்தது. 200 மணி நேர கட்டாய வகுப்புகளில் கலந்துகொள்ள பணம் இல்லாததால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்தோம். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியாக, மத்திய அரசின் SC பிரிவினருக்கான கல்வி உதவித்தொகையின் கீழ் விண்ணப்பித்து ரூ.20 லட்சம் கிடைத்தது." என்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து முதல் முறையாக வணிக உரிமம் பெற்ற முதல் நபர் காவ்யா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில் காவ்யா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பட்டியல் சமூகம் என்பது தலித் சமூகம் தான். எனவே காவ்யா அச்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.
உண்மை என்ன?
Newsmeter தேடலின் முடிவாக தமிழ்நாட்டின் முதல் பெண் பைலட் காவ்யா மாதவன் என்று வைரலாகும் பதிவில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள பெண் காயத்ரி சுப்ரான் என்பதும் அவர் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை விமானி உரிமம் பெறவில்லை என்றும் மதுரையைச் சேர்ந்த காவ்யா என்பவர் முதல் தலித் பெண் விமானி என்றும் நம்பப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் முதல் விமானி யார் என்பது குறித்து தெளிவான தகவல் ஏதும் இல்லை.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் newsmeter இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்