தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Puducherry: 'பெண்களுக்கு மதுபானம் இலவசம்' - கடும் எச்சரிக்கை விடுத்த கலால்துறை!

Puducherry: 'பெண்களுக்கு மதுபானம் இலவசம்' - கடும் எச்சரிக்கை விடுத்த கலால்துறை!

Karthikeyan S HT Tamil

Jul 02, 2023, 01:43 PM IST

google News
மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான விளம்பரம் செய்ய தடை விதித்து புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான விளம்பரம் செய்ய தடை விதித்து புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான விளம்பரம் செய்ய தடை விதித்து புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்றவை விளம்பரம் செய்ய தடைவிதித்து புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி கலால்துறை தாசில்தார் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி கலால் துறையில், மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள், விடுதிகள் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், பெண்களுக்கு மது இலவசம், மது வாங்கினால் பரிசு பொருள்கள் இலவசம் போன்றவற்றை குறித்த விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

மேற்கூறிய மதுபானம் விற்பனை சலுகைகள் சம்பந்தமான பதாகைகள் சுவரொட்டிகள், நாளேடுகளில் வெளியிடுதல், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த விதத்திலாவது விளம்பரம் செய்தல் புதுச்சேரி கலால் வீதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய மதுபான விற்பனை உரிமை பெற்றவர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள், விடுதிகள், சமூக வலைதளங்களில் உள்ள விளம்பரங்களை உடனடியாக நீக்கும்படி எச்சரிக்கப்படுகின்றது. தொடர்பான விதி மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு புதுச்சேரி கலால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி - கடலூர் எல்லையையொட்டி உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் விற்பனையை அதிகரிக்கும் விதமாக இரண்டு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த மதுப்பிரியர்கள் அந்த கடைக்கு சென்று பீர் வாங்கி குடித்துள்ளனர். அதன் பின்பு சலுகையில் வாங்கிய 3ஆவது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது கண்டு ஒரு மதுப்பிரியர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீஸாரிடம் அவர்கள் புகார் கொடுத்தனர். பீர் பாட்டிலில் தினசரி காலண்டர் பேப்பர் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.இந்த நிலையில், மதுபான விற்பனை சலுகைகள் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்றவை விளம்பரம் செய்ய தடைவிதித்து புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி